புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் கொலை| Dinamalar

இஸ்லாமாபாத்-இஸ்லாம் மதத்தின் புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜங்கிள் தேரா என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் ஒருவர், இஸ்லாம் மதத்தின் புனித நுாலின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்து எரித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கிருந்த சிலர் அந்த நபரை தாக்கினர். மேலும் பலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். எந்த புத்தகத்தையும் கிழிக்கவில்லை என … Read more

ரஷிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரட்டியடிப்பு

மாஸ்கோ,  உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் நீர் மூழ்கி கப்பல் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பசிபிக் கடலில் உள்ள குரில் தீவுக்கு அருகே ரஷியாவின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ்’ போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரஷிய கடல் பகுதியில் … Read more

சிலியில் எரிவாயுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! <!– சிலியில் எரிவாயுக் கிடங்கில் பயங்கர தீ விபத்து.! –>

சிலியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எரிவாயு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். La Cisterna மாவட்டத்தில் உள்ள எரிவாயு கிடங்கில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த தும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கொளுந்து விட்டெரியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள இரண்டு சாலைகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும் … Read more

சீனாவில் பஸ் வெடித்து ஒருவர் பலி; 42 பேர் காயம்

பெய்ஜிங், வடகிழக்கு சீனாவில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 42 பேர் காயமடைந்தனர். லியோனிங் மாகாணத்தில் ஷென்யாங் நகரில் ஒரு பஸ் திடீரென வெடித்துள்ளது. வெடிப்பு ஏற்பட்டபோது பெரும் சத்தம் கேட்டதாகவும் ஆனால் பேருந்து தீப்பிடிக்கவில்லை என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் பெரும் காயமடைந்துள்ளனர். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த நிலையில் பெரும் குப்பைச் சிதறலுடன் பஸ் … Read more

ரஷ்ய அதிபரை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த ஜோ பைடன்| Dinamalar

வாஷிங்டன் : “உக்ரைன் மீது போர் தொடுத்தால், அதற்கு உரிய விலை கொடுக்க நேரிடும்,” என, ரஷ்ய அதிபரை தொலைபேசியில் அழைத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ … Read more

உக்ரைனில் ஓட்டலில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

கீவ், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே நகரில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று காலை ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இருதரப்பினர் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. ஓட்டலில் இருந்த அனைவரும் அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த நபர்கள் தொடர்ந்து … Read more

பாகிஸ்தானில் கல்லால் அடித்து ஒருவர் கொலை – குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க இம்ரான்கான் உத்தரவு

லாகூர்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நபர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியதை அடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். பின்னர் உடலை மரத்தில் அவர்கள் தொங்க விட்டனர்.  அந்த நபர் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் மரத்தில் இருந்து உடலை கீழே இறக்க முயன்ற இரண்டு … Read more

ரஷ்யாவின் போர் அச்சுறுத்தலை எதிர்த்து உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி

கைவ், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான … Read more

மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்த தடையா ? சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு

சூரிச்:  புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அதை சோதனை செய்வதற்கு எலி, முயல் உள்ளிட்ட சிறிய வகை விலங்குகள் பயன்படுத்தப் படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது 500,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசு துறை தகவல்கள் வெளியாகின. இதையடுத்து விலங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கு தடை  விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டில் வலுப்பெற்றுள்ளது. இதை ஆதரிப்பவர்கள் பொதுமக்களிடம் கையெழுத்து … Read more

கனடா – அமெரிக்க எல்லையில் போராட்டத்தால் பதற்றம்

விண்ட்சர்:கனடா – அமெரிக்காவை இணைக்கும் பகுதியில் போராட்டக்காரர்கள் குவிந்ததால், பதற்றமான சூழல் நிலவுகிறது.வட அமெரிக்க நாடான கனடாவில், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். எதிர்ப்பு வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.லாரி டிரைவர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தி இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத டிரைவர்கள் … Read more