இரவு நேரத்தில் வானில் பரவலாக தென்பட்ட வடதுருவ ஒளி <!– இரவு நேரத்தில் வானில் பரவலாக தென்பட்ட வடதுருவ ஒளி –>

வடக்கு சுவீடனில் இரவு நேரத்தில் வானில் பரவலாக தென்பட்ட ஆரோரா எனப்படும் துருவ ஒளி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அந்நாட்டு நேரப்படி இரவு 7.30 மணியளவில் அந்த ஒளி பச்சை, டார்க் பின்க், மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்களில் தென்பட்டது. நள்ளிரவுக்கு முன்பாக 4 முறை துருவ ஒளி தென்பட்ட நிலையில் அவற்றுள் பச்சை நிற ஒளி மட்டும் அதிகபட்சமாக 1 மணி நேரம் நீடித்ததாக உள்ளூர் புகைப்பட கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். துருவ ஒளி மிக … Read more

உக்ரைன் தொடர்ந்த வழக்கு- சர்வதேச நீதிமன்ற விசாரணையை புறக்கணித்த ரஷியா

தி ஹேக்: ரஷிய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. இன்றைய விசாரணையை ரஷியா புறக்கணித்தது. உக்ரைன் பிரதிநிதி அன்டன் கோரினெவிச் பங்கேற்று தனது கருத்தை முன்வைத்து வாதாடினார். அப்போது, உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். ரஷ்யா தடுத்து நிறுத்தப்பட வேண்டும், தடுத்து நிறுத்துவதில் நீதிமன்றத்தின் பங்கு உள்ளது என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார். பிரிவினைவாத கிழக்குப் … Read more

உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பதட்டங்கள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகின்றன, உலகெங்கிலும் உள்ள நாடுகள் இந்த பிரச்சினையில் தனித்துவமான நிலைப்பாட்டை எடுக்கின்றன. உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போரில் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் வெளிப்படையாக ஆதரவு ஏதும் அளிக்காமல் இருக்கும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  இந்தியாவும் ரஷ்யாவுக்கும் சர்வதேச உறவுகள் நாலல் நிலையில் உள்ள நிலையில், வரும் காலத்தில் சிறிது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று … Read more

‘‘உக்ரைன் அதிபருடன் நேரடியாக பேசுங்கள்’’-  புதினிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுடனும் பேசினார். அப்போது ஜெலன்ஸ்கியுடன் நேரடியாக பேசி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணுங்கள் என பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. … Read more

வெட்கமில்லாத அமெரிக்கா.. எண்ணெய்க்காக எதிரி வெனிசூலாவின் காலில் விழுந்த பரிதாபம்!

எந்த நாட்டின் மீது கொடூரமான பொருளாதார தடைகளைப் போட்டு அந்த நாட்டை உருக்குலைக்க நினைத்ததோ, இப்போது அதே நாட்டிடம் தனது தேவைக்காக போய் கையேந்தி நிற்கிறது அமெரிக்கா. தேவைன்னா காலைப் பிடிப்பது.. தேவையில்லாட்டி கழுத்தை நெரிப்பது.. இதுதான் அமெரிக்காவின் புத்தி, இயல்பு. ஒரு நாடு அதற்குத் தேவை என்றால் பணத்தைக் கொட்டி கொட்டி அதை தாஜா செய்யும். தேவையில்லாத நாடு என்றால் அதை அழித்து ஒழித்து சின்னாபின்னமாக்க தயங்காது. இப்போது தனது புத்தியை மீண்டும் நிரூபித்துள்ளது அமெரிக்கா. … Read more

இங்கிலாந்தில் உக்ரைன் தேசிய கீதத்தை பாடி ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் <!– இங்கிலாந்தில் உக்ரைன் தேசிய கீதத்தை பாடி ரஷ்யாவிற்கு எதிர… –>

இங்கிலாந்தில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உக்ரைன் நாட்டு தேசிய கீதத்தை பாடி எதிர்ப்பினை பதிவு செய்தனர். லண்டனில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரஷ்ய எதிர்ப்பு பேரணிகளும் நடைபெற்றது. இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போர் எதிர்ப்பு குழுவினர் அந்நாட்டின் தேசிய கீதத்தை பாடி தங்கள் ஆதரவை உக்ரைனுக்கு தெரிவித்தனர்.  Source link

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியாவை கண்டித்து கஜகஸ்தானில் போராட்டம்

கஜகஸ்தான், உக்ரைன்  மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரஷியா போரை நிறுத்தவில்லை. இதனால், பல நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத்தடைகள் விதித்து வருகின்றன. மேலும் ரஷியாவிற்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரஷியாவின் கொடூர தாக்குதலை கண்டித்து கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் சோவியத் ஒன்றிய நிறுவனர் விளாடிமிர் லெனின் சிலை முன்பு … Read more

உக்ரைன் போர் எதிரொலி: ரஷ்யாவில் சேவையை நிறுத்திய டிக் டாக், நெட்ஃபிளிக்ஸ்

மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யாவில் தமது சேவையை நிறுத்திக்கொள்வதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த 12 நாட்களாக மேலாக உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். எனினும், உக்ரைனும் தன்னால் இயன்ற பதிலடியைக் கொடுத்து வருகிறது. இதனிடையே, ரஷ்யா மீது உலக நாடுகள் பலவும் வெவ்வேறு தடைகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸ், டிக் டாக் (நேரடி சேவை) ஆகிய நிறுவனங்களும் தங்களது ரஷ்ய சேவையை … Read more

ஒரு வேளை.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டால்?.. அமெரிக்கா பரபர தகவல்

ரஷ்யத் தாக்குதலில் என்ன நடந்தாலும் அதை சமாளிக்கும் வகையிலான திட்டங்களுடன் உக்ரைன் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ஒரு வேளை உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி இந்த போரில் கொல்லப்பட்டாலும் கூட அதற்கும் மாற்றுத் திட்டங்களை உக்ரைன் வைத்துள்ளதாகவும் பிளிங்கன் கூறியுள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ், 2வது பெரிய நகரமான கார்கிவ் மற்றும் பல்வேறு முக்கிய நகரங்களை சுற்றி வளைத்துள்ளது ரஷ்யா. அடுத்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்த அது … Read more

உக்ரைன் போரால் மத்தியக் கிழக்கு நாடுகளில் உணவுதானிய விலை உயரும் அபாயம் <!– உக்ரைன் போரால் மத்தியக் கிழக்கு நாடுகளில் உணவுதானிய விலை … –>

உக்ரைன் போரின் காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் உணவுதானியம் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உலக அளவில் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்திலும், உக்ரைன் நான்காமிடத்திலும் உள்ளன. இந்த இருநாடுகளும் சேர்ந்து உலகக் கோதுமை ஏற்றுமதியில் 30 விழுக்காட்டையும், மக்காச்சோள ஏற்றுமதியில் 19 விழுக்காட்டையும் கொண்டுள்ளன. உக்ரைனில் பல வாரங்களுக்குப் போர் நீடித்தால் விவசாயிகள் கோதுமை பயிரிட முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் மேலைநாடுகளின் பொருளாதாரத் தடையால் ரஷ்யா விளைவித்த தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாது. இதனால் … Read more