உற்று கவனித்துக் கொண்டிருக்கிறோம்! கேஜ்ரிவால் கைது தொடர்பாக மீண்டும் கருத்து சொன்ன அமெரிக்கா!

Arvind Kejriwal Arrest Reactions: மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக முற்றும் இந்தியா – அமெரிக்கா அறிக்கைப் போர்… 

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: இந்திய மாலுமிகள் 22 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

நியூயார்க்: சிங்கப்பூரைச் சேர்ந்த கிரேஸ் ஓசன் என்ற நிறுவனத்தின் சரக்கு கப்பல் டாலி. இந்த கப்பலை டென்மார்க்கை சேர்ந்த மார்ஸ்க் என்ற கப்பல் நிறுவனம் வாடகைக்கு எடுத்து இயக்கி வந்தது. இந்த கப்பலை இந்திய மாலுமிகள் குழு இயக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த கப்பல் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் படாப்ஸ்கோ ஆற்றை கடந்து சென்றது. அப்போது கப்பலை இயக்கும் புரொபல்லர் சிஸ்டத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து நகர்ந்து சென்றதால், அது செல்லும் … Read more

தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம்.. பெருவாரியான ஆதரவுடன் மசோதா நிறைவேற்றம்

பாங்காக்: தாய்லாந்தில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க வகை செய்யும் திருமண சமத்துவ மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எந்த பாலினத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருமணம் செய்தால் அவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை இந்த மசோதா சட்டப்பூர்வமாக்குகிறது. ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருமண பந்தம் தொடர்பாக ஷரத்துகளில் “ஆண்கள் மற்றும் பெண்கள்” மற்றும் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளை “தனிநபர்கள்” மற்றும் “வாழ்க்கை துணைவர்கள்” என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு … Read more

அமெரிக்க பொருளாதார தடையில் இருந்து ஈரான் கியாஸ் குழாய் திட்டத்துக்கு விலக்கு கோரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத், அண்டை நாடான ஈரானில் இருந்து மலிவான விலையில் கியாஸ் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் முடிவு செய்தது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கடந்த 2009-ல் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் முதலில் இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் கியாஸ் குழாய் திட்டம் என கருதப்பட்டது. ஆனால் இந்தியா அதனை கைவிட்டதால் ஈரான்-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு திட்டமாக மாறியது. இதற்காக 1,150 கிலோ மீட்டர் நீளமுள்ள கியாஸ் குழாய் இரு நாடுகளிடையே பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராக அமெரிக்கா … Read more

சிரியாவில் வான்வழி தாக்குதல்; 15 பேர் பலி

டமாஸ்கஸ், மத்திய கிழக்கு ஆசிய நாடுகளான ஈராக், சிரியாவில் ஈரானிய ஆதரவு பெற்ற கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. எனவே அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டுள்ளன. எனவே அங்குள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிர் எஸ் சோர் நகரில் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சிரியாவில் … Read more

ஆயுதக் குழுவினர் இடைவிடாத தாக்குதல்.. ஹைதியில் பசி-பட்டினியால் வாடும் மக்கள்

கரீபிய நாடான ஹைதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால் பல ஆண்டுகளாக மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். 2021-ல் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபின் வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை கடந்த பிப்ரவரி 7-ம் தேதிக்குள் நடத்தியிருக்கவேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால் சமூக பதற்றம் அதிகரித்துள்ளது. பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் … Read more

பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக பங்கேற்கும் சவுதி அரேபியா

ரியாத், அரேபிய தீபகற்பத்தின் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா, கடுமையான சமூக மற்றும் மதக் கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது. இருப்பினும், சமீப காலமாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தலைமையில் பல மாறுதல்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த மாற்றம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி, அவர்கள் வாகனம் ஓட்டவும், கலப்பு-பாலின நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் மற்றும் ஆண் பாதுகாவலர் இல்லாமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதி … Read more

விலங்குகளுக்கு நோய்த்தொற்று பரப்புவதில் மனிதர்களுக்கு முதலிடம்! அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!

Animals Or Human? Infectors : அண்மையில் வெளியான புதிய ஆய்வின்படி, விலங்குகளுக்கு ஏற்படும் தொற்றுகளுக்கு, பிற காரணிகளை விட, மனிதர்களே அதிகம் என்ற ஆச்சரியமான உண்மை தெரியவந்துள்ளது  

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தாய்லாந்து பாராளுமன்றம்!

LGBTQ சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான முக்கிய நடவடிக்கையாக, தாய்லாந்தின் பாராளுமன்றத்தின் கீழ்சபையில்  தன்பாலின திருமண மசோதா அருதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா என பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் உத்தரவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் ஜுலியன் அசாஞ்சே (52) கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் … Read more