காணும் பொங்கயொட்டி சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து கடந்த 11-ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், 14-ஆம் தேதி வரை 13 ஆயிரத்து 871 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சத்து 17 ஆயிரத்து 392 பேர் பயணம் செய்திருப்பதாகவும், ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 705 பேர் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் … Read moreகாணும் பொங்கயொட்டி சென்னை சுற்றுலாத் தலங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள்

சென்னை:  20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை சூளைமேட்டில் துபாய் மற்றும் இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 6 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 20 கிலோ தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை சூளைமேட்டில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பி.எம்.டபிள்யூ. கார் ஒன்றை சோதனையிட்டபோது அதில் ஏராளமான தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவற்றுக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் காரில் இருந்த 4 பேரை கைது … Read moreசென்னை:  20 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை; தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறையே ஜனவரி 15, 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.பொங்கல் தினமான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.  இந்நிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் … Read moreமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்  47 பேர் காயம்

அவனியாபுரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் நடராஜன், மாநகர ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி ஆணையாளர் அனிஷ்சேகர் ஆகியோர் முன்னிலையிலும் தொடங்கியது. விழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட குழுவினர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் பதிவு செய்யப்பட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் வாடிவாசல் பின்புறம் வரிசையாக நிறுத்தப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 75 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு காலை 8 மணி தொடங்கி நான்கு மணியளவில் முடிவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் … Read moreஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில்  47 பேர் காயம்

பாலமேடு ஜல்லிக்கட்டு.. சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் தேர்வு

மதுரை:மதுரை மாவட்டம் பாலமேட்டில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிந்தது. மாடுகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.போட்டியின் போது மாடுகள் முட்டியதில் 48 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். போட்டியில் 3 காளைகள், சிறந்த காளைகளாக தேர்வு செய்யப்பட்டன. அதிக பட்சமாக 10 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் … Read moreபாலமேடு ஜல்லிக்கட்டு.. சிறந்த மாடுபிடி வீரராக பிரபாகரன் தேர்வு

சந்திரசேகர ராவ் கூட்டணியில் இணையும் ஜெகன் மோகன் ரெட்டி

ஐதராபாத் : தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் அமைத்து வரும் 3வது அணியில் ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் சேர உள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்காக மாநில கட்சிகள் தயாராகி வரும் நிலையில் ஆந்திர எதிர்கட்சி தலைவரும், ஒய். எஸ்.ஆர்.காங்., கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியும் , தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கே.டி.ராமா ராவும் இன்று சந்தித்து பேசி உள்ளனர். இந்த … Read moreசந்திரசேகர ராவ் கூட்டணியில் இணையும் ஜெகன் மோகன் ரெட்டி

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது

மதுரை: தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் முறையே ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதனை அடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்தது.   இந்த நிலையில், 2வது நாளாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை தொடங்கியது.  இதனை மாவட்ட … Read moreபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது

மும்பையில்  பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

மும்பை: மும்பையில் பஸ் சேவைகளை இயக்கி வரும் பெஸ்ட் குழுமத்தில் பணிபுரிந்து வரும் 32 ஆயிரம் ஊழியர்கள் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். தனியார் வாகனங்கள் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதிக்கப்பட்டன.  ஆனால் தனியார் வாகனங்களில் பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், கடந்த 9 … Read moreமும்பையில்  பெஸ்ட் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்

பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவோம் : எடப்பாடி பழனிசாமி

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- எம்.ஜி.ஆர்., அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்கள் மறைந்தாலும், நம்மை வெல்ல எவராலும் இயலாது என்பதை இந்த உலகிற்கு உணர்த்திக் காட்ட வேண்டும். தமிழ் நாட்டில் தொடர்ந்து கழக ஆட்சிதான் என்பதை உண்மையாக்கிக் காட்ட வேண்டும். தமிழக மக்களுக்காகப் பாடுபடும் ஒரே இயக்கம், புரட்சித் தலைவர் உருவாக்கிய அ.தி.மு.க. மட்டும் தான் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும். நம் … Read moreபாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெறுவோம் : எடப்பாடி பழனிசாமி

டி.ஜி.பி.க்கள் நியமனம் 5 மாநில அரசுகளின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது

புதுடெல்லி: டி.ஜி.பி.க்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில டி.ஜி.பி.க்கள் நியமன முறையில் மாற்றம் செய்ய வேண்டும். அந்தந்த மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த வி‌ஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டி.ஜி.பி.யாக பணியமர்த்துவதாகவும் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறும் கேட்டு பிரகாஷ்சிங் என்பவர் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, டி.ஜி.பி.க்கள் பணி ஓய்வுக்கு 3 மாதத்துக்கு முன்னதாக புதிய பரிந்துரை பெயர்களை மத்திய … Read moreடி.ஜி.பி.க்கள் நியமனம் 5 மாநில அரசுகளின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது