இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி…

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி செய்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்திருந்த இந்தப் பேரணி, மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகில் ஆரம்பமாகி, காந்தி பூங்கா வரை சென்றது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில், போர்க் குற்றம் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு இலங்கை அரசுக்கு … Read moreஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மட்டக்களப்பில் பேரணி…

இலங்கையில் மழையை உருவாக்கும் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை…

இலங்கையில் வறட்சியுடனான காலநிலை சில பகுதிகளில் தொடர்வதை அடுத்து, சுமார் 10,800க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சியுடனான காலநிலையினால் மிக முக்கியமான பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்கள் குறைவடைந்துள்ளமையினால், இலங்கையில் நீர் மின் உற்பத்தியும் தற்போது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக மின்வலு, சக்திவலு அமைச்சு குறிப்பிடுகின்றது. இந்த நிலையில், வறட்சியுடனான காலநிலை நிலவும் தருணங்களில் செயற்கையான முறையில் மழையை உருவாக்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கின்றமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தற்போது … Read moreஇலங்கையில் மழையை உருவாக்கும் திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை…

இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் – அதிர்ச்சியில் மக்கள்…

படத்தின் காப்புரிமை NurPhoto Image caption சித்தரிப்புப் படம் இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில் சில குள்ள மனிதர்கள், மக்கள் மீது இரவு வேளைகளில் தாக்குதல் நடத்துவதாக போலிஸ் முறைபாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மக்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, தமது உடலில் காயங்களையும் காட்டியுள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பதிவாகியுள்ள பல முறைபாடுகள் குறித்து போலிஸார் விசாரணைகளை நடத்திய … Read moreஇலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் – அதிர்ச்சியில் மக்கள்…

இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை…

இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் … Read moreஇலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள் கவலை…

இலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு – அதிர்ச்சியில் மக்கள்…

படத்தின் காப்புரிமை Getty Images மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 3.55-தாக சிறிய நில அதிர்வே பதிவாகியள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார். இதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹாலி-எல, பசறை, ஹல்துமுல்ல உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை எந்தவிதமான சேதங்களும் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பயங்கர … Read moreஇலங்கையில் பெரும் சத்தத்துடன் நில அதிர்வு – அதிர்ச்சியில் மக்கள்…

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு…

படத்தின் காப்புரிமை Getty Images இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கைக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் காணப்படுகின்ற தொழிலாளர் சட்டத்தின் பிரகாரம், இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், 1958ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதி சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறித்த வெளிநாட்டு ஊழியர்கள் இலங்கையில் தமது தொழில்வாய்ப்புக்களை … Read moreஇந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு…

“மத,சாதி பிரிவினைகளால் தமிழினத்தை சிதைக்க விடமாட்டேன்” – மனோ கணேசன் பிரத்யேக பேட்டி…

மலையக மக்கள் பிரச்சனை, மத மோதல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, மன்னார் புதைக்குழி, எதிர்கால அரசியல் திட்டம் ஆகியவை குறித்து இலங்கையின் தேசிய ஒருமைபாடு, அரச மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோ கணேசன் அளித்த பிரத்யேக பேட்டி.

இலங்கை பிரதமர் ரணிலை நரியுடன் ஒப்பிட்ட விக்னேஸ்வரன்…

படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI Image caption ரணில் விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்தின் உதவியுடன் போர்க் குற்ற விசாரணை நடத்துங்கள். அதன் பின்பு மன்னிப்புப் பற்றி ஆராய்வோம் என ரணிலின் கருத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க … Read moreஇலங்கை பிரதமர் ரணிலை நரியுடன் ஒப்பிட்ட விக்னேஸ்வரன்…

பேருந்தில் பணிக்கு செல்லும் முன்னாள் அமைச்சர்…

Image caption முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர், தற்போது தான் முன்பு ஆற்றி வந்த அரச பணியில் இணைந்து, அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும். இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன், இப்போது இப்படித்தான் தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். … Read moreபேருந்தில் பணிக்கு செல்லும் முன்னாள் அமைச்சர்…

"ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்" – மஹிந்த ராஜபக்ஷ…

படத்தின் காப்புரிமை BUDDHIKA WEERASINGHE Image caption மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர்க் காலகட்டத்தில் எந்தச் சந்தர்ப்பத்திலும் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. ஒரு சில சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட நபர்களால் … Read more"ரணில் நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார்" – மஹிந்த ராஜபக்ஷ…