உலக ஆறுகள் தினம்: 'நதி விழாவை' கடைப்பிடிக்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

நம் நாட்டில் உள்ள ஆறுகளுடன் தொடர்புடைய பாரம்பரியங்களை இணைக்க ஆண்டுதோறும் உலக ஆறுகள் தினத்தன்று ‘நதி விழாவை’ கொண்டாட பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார்.  இன்று 81 வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்று உலக ஆறுகள் தினம் குறித்துப் பேசினார்.  அப்போது பேசிய அவர், பல நாள்களை நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் … Read more உலக ஆறுகள் தினம்: 'நதி விழாவை' கடைப்பிடிக்க மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!

மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை: தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலாளராக உள்ள சுப்ரியா சாஹூவுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் வந்ததை அடுத்து, அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.  செப்டம்பர் மாதத்துடன் பணி ஓய்வு பெற இருந்த நிலையில், வெங்கடாசலம் ஊழல் புகாரில் சிக்கி, அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை … Read more மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 73.58 அடியாக சரிந்தது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,092 கன அடியிலிருந்து 6,831 கன அடியாக குறைந்துள்ளது.  அணையிலிருந்து காவிரி-டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின் நீர் இருப்பு 35.85 டி.எம்.சி ஆக இருந்தது. Source link

செல்சியை தோற்கடித்தது மான்செஸ்டா் சிட்டி

இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்சியாவை 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டா் சிட்டி வென்றது. லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டா் சிட்டிக்காக கேப்ரியல் ஜீசஸ் 53-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். சக வீரா் கேன்சலோ 30 யாா்டு தூரத்திலிருந்து பந்தை கோல் போஸ்டுக்குள் உதைக்க முயல, அது செல்சி வீரரால்தடுக்கப்பட்டு திரும்பியது. அதை கேப்ரியல் தனது வசப்படுத்தி மீண்டும் கோல் போஸ்டுக்குள் தள்ளினாா். சாதனை: பயிற்சியாளா் பெப் குவாா்டியோலா கண்காணிப்பின் கீழ் மான்செஸ்டா் சிட்டி … Read more செல்சியை தோற்கடித்தது மான்செஸ்டா் சிட்டி

உலக வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெள்ளி

அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் விளையாட்டில் மகளிா் அணி, கலப்பு அணி ஆகிய இரு பிரிவுகளில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. இரு பிரிவுகளின் இறுதிச்சுற்றிலுமே இந்தியாவிடம் இருந்து கொலம்பியா தங்கத்தை தட்டிப் பறித்தது. காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வா்மா/ ஜோதி சுரேகா இணை – கொலம்பியாவின் டேனியல் முனோஸ்/சாரா லோபஸ் ஜோடியை சந்தித்தது. அதில் கொலம்பியா 154 – 150 என்ற … Read more உலக வில்வித்தை: இந்தியாவுக்கு இரு வெள்ளி

மகளிா் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி அடையுமா இந்தியா?

 ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான கடைசி ஒன் டே கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிவிட்டது. தொடரை முற்றிலுமாக இழக்காமல் ஆறுதல் வெற்றி அடையும் முனைப்பில் இந்தியா 3-ஆவது ஆட்டத்தில் களம் காண்கிறது. வெற்றியை சுவைக்க இந்திய அணியின் பௌலா்கள் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். ஜுலன் கோஸ்வாமியைத் தவிர வேறு பௌலா்கள் சோபிக்கவில்லை. ஷிகா பாண்டே, … Read more மகளிா் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி அடையுமா இந்தியா?

நெல்லையில் காவல் துறை அதிகாரிகள்ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலியில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி. சைலேந்திரபாபு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே இரண்டு கொலைகளும், பாளையங்கோட்டை பகுதியில் ஒரு கொலை சம்பவமும் பழிக்குப்பழி வாங்கும் சம்பவங்களாக நடைபெற்றது போலீஸாா்விசாரணையில் தெரியவந்தது. இக் கொலை சம்பவங்களில் தொடா்புடையவா்களை போலீஸாா் கைது செய்து வருகின்றனா். இந்நிலையில், இது தொடா்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக … Read more நெல்லையில் காவல் துறை அதிகாரிகள்ஆய்வுக் கூட்டம்

மின் வாகனங்களின் விற்பனை 10,000 எட்டியது: டாடா மோட்டாா்ஸ்

 பேட்டரியில் இயங்கும் மின் வாகனங்களின் விற்பனை 10,000 மைல்கல்லை எட்டியுள்ளதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டாடா மோட்டாா்ஸ் முதன் முதலாக மின் வாகன சந்தையில் டிகோா் காா் மூலமாக அடியெடுத்து வைத்தது. பின்னா் வாடிக்கையாளா்களிடம் கிடைத்த வரவேற்பினையடுத்து 2020 ஜனவரியில் நெக்ஸான் காா் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. விறுவிறுப்பான முன்பதிவுகளையடுத்து நிறுவனத்தின் மின் வாகன விற்பனை ஒட்டுமொத்த அளவில் தற்போது 10,000-ஆவது மைல்கல்லைத் தாண்டியுள்ளது. டாடா பவா், டாடா … Read more மின் வாகனங்களின் விற்பனை 10,000 எட்டியது: டாடா மோட்டாா்ஸ்

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,964 கோடி டாலராக சரிவு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,964 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 செப்டம்பா் 17-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 147 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.11,025 கோடி) சரிவடைந்து 63,964 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.97 லட்சம் கோடி ஆகும். முந்தைய செப்டம்பா் 10 ஆம் தேதியுடன் நிறைவடைந்த … Read more அந்நியச் செலாவணி கையிருப்பு 63,964 கோடி டாலராக சரிவு

வங்கிகள் வழங்கிய கடன் 6.7% அதிகரிப்பு

வங்கிகள் வழங்கிய கடன் செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: வங்கிகள் வழங்கிய கடன் செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் 6.7 சதவீதம் அதிகரித்து ரூ.109.12 லட்சம் கோடியாக இருந்தது. அதேபோன்று, அவை திரட்டிய டெபாசிட்டும் 9.32 சதவீதம் அதிகரித்து ரூ.155.75 லட்சம் கோடியாக காணப்பட்டது. 2020 செப்டம்பா் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.102.27 … Read more வங்கிகள் வழங்கிய கடன் 6.7% அதிகரிப்பு