தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்?

மதுரை (22 ஜன 2019): காலியாகவுள்ள 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துவது குறித்து வரும் 24 ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரி திருமங்கலத்தைச் சேர்ந்த தாமோதிரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தபோது தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தலை நடத்த தலைமைச் … Read moreதமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல்?

வாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் மனு!

புதுடெல்லி (22 ஜன 2019): 2014 ஆம் தேர்தலில் வாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்டு மோசடி செய்து பாஜக ஆட்சியை பிடித்தாக எழுந்துள்ள புகாரை அடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் டெல்லி போலீசில் மனு அளித்துள்ளது. இந்தியாவில் காலகாலமாக வாக்குச்சீட்டு முறையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வாக்குச்சீட்டு முறை தவிர்க்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு முறை கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் எந்த தேர்தல் ஆனாலும் ஏறக்குறைய மின்னணு வாக்குப்பதிவு … Read moreவாக்கு எந்திரம் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசில் மனு!

அமேதி தொகுதியை கைவிடும் ராகுல் காந்தி!

புதுடெல்லி (22 ஜன 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் போட்டியிடப் போவதில்லை என தெரிகிறது. மஹாராஷ்டிரா அல்லது மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி போட்டியிடலாம் என்றும் அல்லது இரண்டு மாநிலங்களிலும் போட்டியிடலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதனைப் பகிருங்கள்:

வைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா!

சென்னை (22 ஜன 2019): கவிஞர் வைரமுத்துவை பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா மீண்டும் சீண்டியுள்ளார். சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய வைரமுத்து திருமணம் குறித்து தனது கருத்தினை வெளிப்படுத்தினார். ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சேரன் தனது அடுத்தப் படமான திருமணம் சில திருத்தங்களுடன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த திரைப்படம் … Read moreவைரமுத்துவை மீண்டும் சீண்டிய ஹெச்.ராஜா!

தைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்!

 திருவண்ணாமலை (22 ஜன 2019): தைபூச திருவிழாவை முன்னிட்டு கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு பக்தர்கள் வழிபட்டனர். தமிழகம் முழுவதும் நேற்று தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள வடலூர், பழனி ஆகிய இடங்களில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாக்களில் கலந்துகொண்ட பக்தர்கள் முருகனுக்குத் தங்கள் காணிக்கைகளை செலுத்தி வழிபட்டனர். தைப்பூசத் திருநாளில் பக்தர்கள் முருகனுக்குக் காவடி எடுத்தல், தீ மிதித்தல், அலகு குத்துதல் போன்ற வழிபாடுகள் மூலம் காணிக்கை செலுத்துவது வழக்கம். … Read moreதைபூச திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கை விட்ட பக்தர்கள்!

நடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்!

சென்னை (22 ஜன 2019): நடிகர் அஜீத்தின் அறிக்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பாராடடியுள்ளார். நேற்று அஜீத் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார். மேலும் அஜீத் குமாரையும் அவர் பாராட்டினார். ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜீத் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- “பாஜகவில் சேருமாறு நடிகர் அஜித்குமாரை அழைக்கவில்லை. இளைஞர்கள் எல்லோரும் அரசியலில் … Read moreநடிகர் அஜீத் அறிக்கைக்கு தமிழிசை பதில்!

உல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி!

பெங்களூரு (22 ஜன 2019): கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்குள் அடிதடி நடந்துள்ளது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட எம்.எல்.ஏவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ஓட்டலில் (ரெசார்ட்) தங்க வைக்கப்பட்டனர். பாரதீய ஜனதாவின் குதிரை பேரத்தில் இருந்து பாதுகாக்கும் … Read moreஉல்லாச விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது கொலை முயற்சி!

பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தல்!

நாகூர் (22 ஜன 2019): தாமி என்கிற தமிம் அன்சாரி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது. கஜா புயலால் பாதிப்புக்குள்ளான வீடுகளை சீரமைத்துத் தரும் பணிகளை ஆய்வு செய்ய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமையிலான நிர்வாகிகள் நாகை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.அப்போது நாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எம்.பாக்கர், “நாகூர் பகுதியில் உளவுதுறை அதிகாரிகள் தொடர்ச்சியாக உண்மைக்கு மாற்றமான தகவல்களை மேலிடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.அதனால் … Read moreபொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்: எஸ்.எம்.பாக்கர் வலியுறுத்தல்!