தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பட்டு செய்யலாம்

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் முறைப்பாடளிப்பதற்கான தொடர்பு விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஏதேனும் தேர்தல் விதிமீறல்கள், வன்முறைகள் இடம்பெற்றால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கத்திற்கோ, அல்லது வைபர் மற்றும் வாட்ஸ்அப் ஊடாகவோ முறையிடலாம் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொதும்க்கள தொடர்பு விவரங்கள் பின்வருமாறு; Telephone :011 – 2868212 / 011 – 2868214 / 011 – 2868217 Fax : 011 –2868529 / 011 – 2868526 Viber … Read moreதேர்தல் முறைகேடுகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பட்டு செய்யலாம்

நான்கு மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்

நான்குமாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பதுளை,இரத்னபுரி, கண்டி, கேகாலை ஆகியமாவட்டங்களிலேயே இவ்வாறு மண்சரிவு ஏற்படும்அபாயமுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரிமாவட்டத்தின் ஹல்தும்முல்ல, பதுளை மாவட்டத்தின் பலாங்கொடை, இம்புல்பே,ஓபநாயக்க, கண்டி மாவட்டத்தில் கங்கவதகோரல்ஈகேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்ட, தெகியோவிட்ட ஆகிய இடங்களில் மண்சரிவுஅபாயம் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக மக்கள்எச்சரிக்கையாக இருக்கும்படியும் அனர்த்தமுகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபாய இருவரையும் புறக்கணிக்க வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபாய இருவரையும் புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள 35 வேட்பாளர்களில் தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளராக தான் களம் இறங்கியுள்ளதாககூறிய சிவாஜிலிங்கம், பிரதான அரசியல் கட்சிகளில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் தமிழ் மக்களுக்கு யுத்த காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தமை தற்போது அவர்களின் … Read moreசஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபாய இருவரையும் புறக்கணிக்க வேண்டும்

ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

வவுனியாவில்ஐக்கிய தேசிய கட்சியின் வன்னிதேர்தல் காரியாலயம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிதேர்தலை முன்னிட்டு ஐ. தே. கட்சியின்வன்னிக்கான தேர்தல் தலைமை காரியாலயம்இன்று வவுனியா நகரில் பாராளுமன்றஉறுப்பினர் சுவாமிநாதனால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது பொதுமக்கள் மற்றும்ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களிற்குதேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. நிகழ்வு ஐக்கியதேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர்கருணதாச தலைமையில் இடம்பெற்றது. இதில் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள்எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் வரலாற்று பொக்கிசம் – ராவணன் குகை பற்றி கேள்விப்பட்டிருகின்றீர்களா?

இலங்கையின் பதுளையின் எல்ல நகரத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலும், பண்டாரவளையிலிருந்து 11 கிமீ (7 மைல்) தொலைவிலும் ராவணன் குகை அமைந்துள்ளது. இது ஒரு சிறிய குகை, இது சுமார் 50 அடி அகலம், 150 அடி நீளம் மற்றும் 60 அடி உயரம் கொண்டது. சீதாபிராட்டியை கடத்தி வந்த ராவனண் ஒளித்து வைக்க இந்த குகையை பயன்படுத்தியதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த குகை கடல் மட்டத்திலிருந்து 1,370 மீ (4,490 அடி) உயரத்தில் ஒரு … Read moreஇலங்கையின் வரலாற்று பொக்கிசம் – ராவணன் குகை பற்றி கேள்விப்பட்டிருகின்றீர்களா?

அருவக்காடு வெடிப்பு விவகாரம்- இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

அருவக்காடு குப்பை கொட்டும் இடத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் மேற்கொண்ட விசாரணையின் இறுதி அறிக்கையானது புத்தளம் நீதவான் நீதிமன்றத்திற்கும், வனாத்தவில்லு பொலிஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அறிக்கை தொடர்பாக நீதிமன்றம் கவனம் செலுத்தியதன் பின்னர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வனாத்தவில்லு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலைமெகா பொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரச இரசாயன பகுப்பாய்வாளர் அமைச்சு மட்டத்தில் மேற்கொண்ட விசாரணைக்கு … Read moreஅருவக்காடு வெடிப்பு விவகாரம்- இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

யாழில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழில் இன்று காலையிலிருந்து விடாது மழை பெய்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்புற்றுள்ளது . அத்துடன் கொட்டித்தீர்க்கும் மழையினால்வெள்ளம் போடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மைத்திரியின் அலுவலகதிற்கு பூட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரால் கொண்டுசெல்லப்பட்ட தனியான அலுவலகம் மூடப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தில் இருந்த கதிரைகள் உட்பட அனைத்து தளபாடங்களும் அகற்றப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி இடம்பெற உள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்னும் சொற்ப நாட்களே குறித்த இல்லத்தில் இருக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவூப் ஹக்கீமை கைது செய்யுங்கள்

ரவூப் ஹக்கீமை கைது செய்யுமாறு முஸ்லிம் உரிமைகள் பாதுகாப்பிற்கான கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருடன், உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உரையாற்றிக் கொண்டிருக்கும் வீடியோவை முஸ்லிம் உரிமைகள் பாதுகாப்பிற்கான கூட்டணி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் உரிமைகள் பாதுகாப்பிற்கான கூட்டணி நேற்று பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளது. 2015 பொதுத் தேர்தலின்போது காத்தான்குடி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் குறித்த வீடியோ காட்சிகளை பொலிஸ் … Read moreரவூப் ஹக்கீமை கைது செய்யுங்கள்

அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள், மாகாண சபை நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் என்பனவற்றில் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வாக்குகளை கோருவதற்கும் துண்டுபிரசுரங்களை விநியோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது உரிய நிறுவன தலைவர்களின் பொறுப்பாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.