‘‘அன்பும், பணிவும் மட்டுமே நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும்…!’’

ஆன்மீக உபான்யாசகர் ஆர். கிருஷ்ணமூர்த்தி உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும், உயிர்களையும் தனது சங்கல்பத்தாலேயே நியமிக்கிறவன் கண்ணன் ஒருவனே. கண்ணன் பிறந்த போது, தன் சுய வடிவுடன் – அதாவது நான்கு திருக்கரங்கள், அவற்றில் சங்கு, சக்கரம், கதை, தாமரை இவற்றுடன் – பிறந்தான். பரமனையே பிள்ளையாகப் பெற்றோமே, எனப் பெருமைப் படாமல், பயந்த பெற்றோர், “இவற்றை மறைத்துக் கொள்“, எனப் பெற்றோர் வேண்டுகிறார். கண்ணனும் அவ்வாறே செய்தான். ஆக கண்ணன் பிறந்தவுடனேயே தாய் – தந்தை … Read more ‘‘அன்பும், பணிவும் மட்டுமே நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும்…!’’

659 பயனாளிகளுக்கு ரூ. 1.50 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் வழங்கினர்

திருவள்ளூர், ஜன. 15– திருவள்ளூர் மாவட்டத்தில் 659 பயனாளிகளுக்கு ரூ. 1.50 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், கலெக்டர் பா.பொன்னையா ஆகியோர் வழங்கினர்திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், வருவாய் நிர்வாகம் (ம) பேரிடர் மேலாண்மை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய துறைகள் சார்பாக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ர்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்கள் மற்றும் மாவட்ட … Read more 659 பயனாளிகளுக்கு ரூ. 1.50 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் பென்ஜமின், பாண்டியராஜன் வழங்கினர்

பாண்டிச்சேரியில் 28 பேருக்கு கொரோனா உறுதி

பாண்டிச்சேரி, ஜன. 15– பாண்டிச்சேரியில் நேற்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 16 பேர் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள். மீதி 12 பேர் மாகியைச் சேர்ந்தவர்கள். மருத்துவமனையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்குப் பின் 324 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். Related posts: வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளம் நிரம்பியது ‘‘இறப்பு என்னைத் தழுவும் வரை இனி, அரசியலில் ஈடுபடமாட்டேன்…’’ தமிழருவி மணியன் அறிக்கை கொரோனா தடுப்பூசியின் 2 டோசுக்கான … Read more பாண்டிச்சேரியில் 28 பேருக்கு கொரோனா உறுதி

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 லட்சத்து 39 ஆயிரம் பேர் பதிவு

தமிழகம் முழுவதும் 166 மையங்களில் நாளை தடுப்பூசி வழங்கும் பணி துவக்கம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 லட்சத்து 39 ஆயிரம் பேர் பதிவு சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி விழுப்புரம், ஜன.15– தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 11 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என்றும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி … Read more கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 4 லட்சத்து 39 ஆயிரம் பேர் பதிவு

பில்லூர் – திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணி

அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி வைத்தார் விழுப்புரம், ஜன. 15–- பில்லூர்- – திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே ரூ.1¼ கோடியில் தரைப்பாலம், வெள்ள பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியம் பில்லூர்- – திருப்பாச்சனூர் இடையே ஓடும் நரியாற்றின் குறுக்கே ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் … Read more பில்லூர் – திருப்பாச்சனூர் நரியாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணி

இந்தியாவில் 18.49 கோடி கொரோனா பரிசோதனைகள்

புதுடெல்லி, ஜன. 15– இந்தியாவில் இதுவரை 18 கோடியே 49 லட்சத்து 62 ஆயிரத்து 401 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,590 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 27 ஆயிரத்து 683 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 191 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் … Read more இந்தியாவில் 18.49 கோடி கொரோனா பரிசோதனைகள்

சென்னையில் இருந்து 10,276 பஸ்களில் 5 லட்சத்து 6 ஆயிரம் பயணிகள் வெளியூர் பயணம்

பொங்கல் பண்டிகைக்கு சென்னை, ஜன.15– போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 10 ஆயிரத்து 276 பேருந்துகளில், 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். முன்பதிவு வாயிலாக, 5 கோடியே 46 லட்சம் ரூபாய் வருவாய் வந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பான முறையில் சென்று வருகின்ற வகையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் … Read more சென்னையில் இருந்து 10,276 பஸ்களில் 5 லட்சத்து 6 ஆயிரம் பயணிகள் வெளியூர் பயணம்

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்

சென்னை, ஜன. 15 த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த நவம்பர் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பி.எஸ்.ஞானதேசிகன் குணமடைந்து வீடு திரும்பினார். இருந்தும் உடலில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்ததால், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அவர் காலமானார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் … Read more த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்

முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன் தமிழக வீரர்கள் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் அபாரம் பிரிஸ்பேன், ஜன. 15– இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் அடித்தது. இந்த போட்டியில் களம் இறங்கிய தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்து வீசி தனது சர்வதேசய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை … Read more முதல்நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 274 ரன்

அதிபர் பதவியிலிருந்து டிரம்ப்பை நீக்க அவரது கட்சி எம்.பி.க்களே ஆதரவு

வாஷிங்டன்: வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்ப்பை நீக்க அவரது குடியரசு கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டளித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 3ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார்.இதற்கிடையே ‘தேர்தலில் மோசடி நடந்துள்ளது’ என குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் … Read more அதிபர் பதவியிலிருந்து டிரம்ப்பை நீக்க அவரது கட்சி எம்.பி.க்களே ஆதரவு