‘இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடந்தால்…’- பாகிஸ்தானை எச்சரிக்கும் அமெரிக்கா!…

Washington:  அமெரிக்க அரசு தரப்பு பாகிஸ்தானிடம், தீவிரவாதத்துக்கு எதிராக ஸ்திரத்தன்மையுடைய நம்பகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க தரப்பு, ‘இந்தியா மீது இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மிகவும் மோசமானதாக மாறும்’ என்று எச்சரித்துள்ளது.  இது குறித்து அமெரிக்க தரப்பு மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிராக கறாரான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தய்பா அமைப்புகள் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும். தற்போது நிலவும் சூழலில் … Read more‘இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடந்தால்…’- பாகிஸ்தானை எச்சரிக்கும் அமெரிக்கா!…

ஜம்மூ காஷ்மீரில் 3 சக வீரர்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சி.ஆர்.பி.எப் வீரர்!…

Udhampur, Jammu and Kashmir:  ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் உதாம்பூரில், சி.ஆர்.பி.எப் துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், தன்னுடன் பணி புரிந்து வந்த சக வீரர்கள் 3 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தன்னையும் அவர் துப்பாக்கியில் சுட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.  இது குறித்து சி.ஆர்.பி.எப் தரப்பில் மூத்த அதிகாரி ஹரிந்தர் குமார், ‘இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் இறந்துள்ளனர். தன்னையே சுட்டுக் கொண்ட … Read moreஜம்மூ காஷ்மீரில் 3 சக வீரர்களை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற சி.ஆர்.பி.எப் வீரர்!…

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்…

New Delhi:  ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, கூட்டணி தொடர்பாக ஊடகத்தில் வரும் செய்திகள் யாவும் காங்கிரஸ் தலைவர்களால் அரசியல் ஆதாயத்திற்காக செய்பவை எனக் கூறியுள்ளார். ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித்துடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். … Read moreஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்…

உச்சி வெயிலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது! – தேர்தல் ஆணையம்…

உச்சி வெயிலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ எழுதியுள்ள கடிதத்தில், இதற்கு முன் உச்சி வெயிலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தியதால் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் வெப்பம் தாளாமல் உயிரிழந்தது பற்றி ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இப்படி, கடுமையான கோடைக் காலத்தில் வெயில் அதிகமுள்ள நேரத்தில் நடத்தப்படும் பொதுக்கூட்டங்களால் மக்கள் இன்னலுக்குள்ளாவது … Read moreஉச்சி வெயிலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது! – தேர்தல் ஆணையம்…

உலக சிட்டுக்குருவி தினம்: ட்விட்டரில் மக்களின் கருத்துகள் என்ன?…

New Delhi:  இன்று உலக சிட்டுக் குருவி தினம், சிட்டுக்குருவியின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்படுகிறது. இது சர்வதேச அளவிலான முயற்சியாகும். நேச்சர் ஃபாரெவர் சொஸைட்டி என்ற அமைப்புடன் இணைந்து பிரான்சின் இயற்கை சுற்றுச்சூழல் சங்கம் (Eco-Sys Action Foundation)இந்த முயற்சிகளை நாடாளவிலும், உலகளவிலும் முன்னெடுத்து வருகிறது. நேச்சர் ஃபார்ரெவர் சொஸைட்டியை முகம்மது திலாவரால் தொடங்கப்பட்டது. உலகின் … Read moreஉலக சிட்டுக்குருவி தினம்: ட்விட்டரில் மக்களின் கருத்துகள் என்ன?…

குறைந்த செலவில் வாழ ஏற்ற சிட்டிஸ்: பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய நகரங்கள்!…

New York:  மிகவும் குறைந்த செலவில் வாழ ஏற்ற நகரங்கள் குறித்து ‘எக்கனாமிஸ்ட் இன்டலிஜன்ஸ் யூனிட்ஸ் 2019 உலக அளவில் வாழ ஆகும் செலவு’ என்ற ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த சர்வேவின் முடிவில் சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.  இந்த ஆய்வில், பாரீஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நகரங்களில்தான் மக்கள் வாழ்வதற்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நகரங்கள், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் … Read moreகுறைந்த செலவில் வாழ ஏற்ற சிட்டிஸ்: பட்டியலில் இடம் பிடித்த 3 இந்திய நகரங்கள்!…

லண்டனில் கைதான நிரவ் மோடிக்கு ஜாமின் மறுப்பு!!…

New Delhi:    லண்டனில் கைதாகியுள்ள நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  5 லட்சம் பவுண்ட் தொகை செலுத்தினால் மட்டுமே ஜாமின் வழங்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு மோசடி செய்த புகாரில் தேடப்படும் நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இங்கிலாந்து போலீசார் ஆஜர்படுத்தினர். அங்க அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அவர் … Read moreலண்டனில் கைதான நிரவ் மோடிக்கு ஜாமின் மறுப்பு!!…

கல்லூரி படிப்பை தவிர்க்கும்படி வலியுறுத்தப்படும் பொள்ளாச்சி பெண்கள்? – NDTV ரிப்போர்ட்…

Pollachi:  பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து கல்லூரி படிப்பை தவிர்க்கும்படி அப்பகுதி பெண்கள் வற்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக என்.டி.டி.வி. நேரடியாக கள ஆய்வில் ஈடுபட்டது. கல்லூரி மாணவிகள் சிலர் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- பொள்ளாச்சியை சேர்ந்த பெண்களை மணமுடிப்பதை தற்போது பலர் தவிர்த்து வருகின்றனர். குடும்ப கலாச்சாரத்திற்கு பொள்ளாச்சி பகுதி பெயர் பெற்றிருந்தது. ஆனால் அந்த சூழல் தற்போது மாறிவிட்டது. தொலைதூர கல்வியை கற்கும்படி எங்களது பெற்றோர் வலியுறுத்துகின்றனர். நேரடியாக கல்லூரிக்கு செல்வதை தவிர்க்கும்படி … Read moreகல்லூரி படிப்பை தவிர்க்கும்படி வலியுறுத்தப்படும் பொள்ளாச்சி பெண்கள்? – NDTV ரிப்போர்ட்…

‘’தேர்தலில் வெற்றிபெற இயலாதவர்களை திணித்தால் அதற்கு பெயர் வாரிசு அரசியல்’’ : தம்பிதுரை…

தேர்தலில் வெற்றி பெற இயலாதவர்களை திணித்தால் அதற்கு பெயர்தான் வாரிசு அரசியல் என்று தம்பிதுரை கூறியுள்ளார். மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது- அதிமுகவில் வாரிசு அரசியல் என்று ஏதும் கிடையாது. தேர்தலில் வெற்றி பெற இயலாதவர்களை திணித்தால் அதற்கு பெயர் வாரிசு அரசியல். கருத்துக் கணிப்பை விட மக்கள் கணிப்பு என்னவென்றுதான் பார்க்க வேண்டும். ஊடகங்களின் கருத்துக் கணிப்பை சில சமயங்களில் ஏற்றுக் கொள்ள முடியாது. கருத்துக் … Read more‘’தேர்தலில் வெற்றிபெற இயலாதவர்களை திணித்தால் அதற்கு பெயர் வாரிசு அரசியல்’’ : தம்பிதுரை…

மக்களவை தேர்தல் : தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியானது…

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், எச். ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதில் அக்கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்ற கட்சிகளான பாமகவுக்கு 7 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒரு தொகுதியும், புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதியும், புதிய தமிழகத்திற்கு ஒரு தொகுதியும், … Read moreமக்களவை தேர்தல் : தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியானது…