ஆன்டிகுவா டெஸ்ட் ; மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய அணி 75 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்சை ஆடி வருகிறது. இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி, நேற்று 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு … Read moreஆன்டிகுவா டெஸ்ட் ; மே.இ.தீவுகள் 222 ரன்களுக்கு ஆல் அவுட்

அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி ; கறுப்பு பட்டை அணிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். வழக்கறிஞர், அரசியல்வாதி என்பதைத் தாண்டி விளையாட்டுத் துறையிலும் குறிப்பாக கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தியவர் ஜெட்லி. டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகள் இருந்தவர். அப்போது சேவாக், காம்பீர், இஷாந்த், தற்போதைய கேப்டன் … Read moreஅருண் ஜெட்லி மறைவுக்கு அஞ்சலி ; கறுப்பு பட்டை அணிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்

மோட்டோரோலா ஒன் ஆக்சன்: ஆகஸ்ட் 30 முதல் விற்பனை

டெனிம் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதனை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்: தொடுதிரை: 6.3 அங்குலம் எஃப்டிஹெச் + சினிமாவிஷன்; விகிதாச்சாரம் 21:9 இயக்க வேகம்: 4 ஜிபி RAM சேமிப்பளவு: 128 ஜிபி முன்பக்க காமிரா: 12 எம்பி ஆற்றல் பின்பக்க … Read moreமோட்டோரோலா ஒன் ஆக்சன்: ஆகஸ்ட் 30 முதல் விற்பனை

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த முறை மோடி பிரதமராக இருந்த போது நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்தாண்டு சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட ஜெட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது முதல் அரசியலில் பெரிதும் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் உடல்நிலையைக் காரணம் காட்டி, சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலிலும் போட்டியில்லை … Read moreமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

எமர்ஜென்சியின் போது 19 மாதம் சிறைவாசம் அனுபவித்த அருண் ஜெட்லி

1952-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி செயின்ட் சேவியர் பள்ளியில் படிப்பை முடித்து, பொருளாதாரத்தில் பட்டம் முடித்தார். அதன் பின் சட்டப் படிப்பையும் முடித்தார். இளம் வயதிலேயே ஜன சங்கத்தில் உறுப்பினராகி, அதன் கிளை அமைப்பான யுவமோர்ச்சாவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் ஜெட்லி. 1975-ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தபோது ஜெயப்பிரகாஷ் நாராயணன், வாஜ்பாய் போன்ற முக்கியத் தலைவர்கள் பலர் அதனை எதிர்த்தனர். அவர்களுடன் சேர்ந்து ஜெட்லியும் எமர்ஜென்சிக்கு … Read moreஎமர்ஜென்சியின் போது 19 மாதம் சிறைவாசம் அனுபவித்த அருண் ஜெட்லி

எதிர்க்கட்சியிலும் நண்பர்கள்; மறைந்த ஜெட்லியின் சிறப்பு

66 வயதான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணம் அடைந்திருக்கிறார். ‘நட்புக்கு இலக்கணம்’ என்று சொல்வார்களே… அந்த வார்த்தைகளுக்கு மிகவும் பொருத்தமானவர் அருண் ஜெட்லி. அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை பார்க்கலாம். அருண் ஜெட்லி, 1952ம் வருடம், டிசம்பர் 28ம் தேதி டெல்லியில் மகாராஜ் கிஷன் ஜேட்லி, ரத்தன் பிரபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். டெல்லி சேவியர் பள்ளியில் படித்து விட்டு, ஸ்ரீராம் கல்லூரியில் பி.காம் பட்டம் படித்தார். … Read moreஎதிர்க்கட்சியிலும் நண்பர்கள்; மறைந்த ஜெட்லியின் சிறப்பு

தங்கம் சவரன் விலை உயர்வு; ரூ.30 ஆயிரத்தை தொடுகிறது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது. இதன்பின், ஒரு வாரத்தில் தங்கம் விலை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரி்த்தது. ஆக. 7ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.568 அதிகரித்து, சவரன் விலை ரூ.28,352க்கு விற்றது. கடந்த வாரத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.3618க்கும், சவரன் … Read moreதங்கம் சவரன் விலை உயர்வு; ரூ.30 ஆயிரத்தை தொடுகிறது

இஷாந்த் வேகத்தில் மே.இ.தீவுகள் பரிதாபம்… ஆன்டிகுவா டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இஷாந்த் வேகத்தில் 5 விக்கெட்டுகளை காலி செய்ய மே.இ.தீவுகள் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து பரிதாபமாக உள்ளது. இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்த இந்தியா நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் நாளில் 20 ரன்களுடன் இருந்த ரிஷப் … Read moreஇஷாந்த் வேகத்தில் மே.இ.தீவுகள் பரிதாபம்… ஆன்டிகுவா டெஸ்டில் வலுவான நிலையில் இந்தியா

தீவிரவாதிகள் ஊடுருவல்? கோவை பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையினர் வெடிகுண்டு சோதனை

தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு வீரர்கள் நீண்ட நேரமாக சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்துக்குள் லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இலங்கை வழியாக இந்த பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், குண்டு வெடிப்பு போன்ற … Read moreதீவிரவாதிகள் ஊடுருவல்? கோவை பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையினர் வெடிகுண்டு சோதனை

சென்னையில் பெரிய கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்; தேவஸ்தான போர்டு தலைவர் பேட்டி

திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போன்று சென்னையில் ஒரு பெரிய பெருமாள் கோயிலை கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுவார் என்று தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியுள்ளார். திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலை நிர்வகிக்கும் திருப்பதி-திருமலா தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளனர். அவர்களின் வசதிக்காக சென்னையில் ஒரு பெருமாள் கோயிலை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம். … Read moreசென்னையில் பெரிய கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்; தேவஸ்தான போர்டு தலைவர் பேட்டி