விசாரணை கைதி சாவு – போலீஸ் மேல் சந்தேகம்

கடலூர் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவர் கார் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸார் கைது செய்திருந்தனர். கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அடைக்கப்பட்டிருந்த அவர் உடல்நல குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் உடல்நல குறைபாட்டால் உயிரிழந்தாரா அல்லது போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தாரா என்று அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதனால் நாராயணன் உடல் மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறும்போது உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் … Read moreவிசாரணை கைதி சாவு – போலீஸ் மேல் சந்தேகம்

ஓ பன்னீர்செல்வம்தான் அடுத்த முதலமைச்சர் – அமமுக முக்கிய புள்ளி திட்டவட்டம்

இந்திய அளவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் திமுக அபார வெற்றியடைந்தது. அதிமுகவுக்கு 1 இடம்தான் கிடைத்தது. அதேபோல சட்டமன்ற இடைதேர்தலிலும் திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “பாஜக எடப்பாடியை தூக்கிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் பன்னீர் செல்வத்தை உட்கார வைக்கும். ஓபிஎஸ் மகன் தேனியில் வெற்றி பெற்றதை ஏற்க முடியவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் … Read moreஓ பன்னீர்செல்வம்தான் அடுத்த முதலமைச்சர் – அமமுக முக்கிய புள்ளி திட்டவட்டம்

கணவனே போயாச்சு குழந்தைங்க மட்டும் எதுக்கு? தாய் செய்த மோசமான செயல்

சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் சிபிராஜ். கேரளாவை சேர்ந்த இவர் தனது முதல் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சைஜா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆதிதேஷ், ஸ்ரீ லட்சுமி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்னாள் சிருநீரக கோளாறால் சிபிராஜ் இறந்துவிட்டார். அதற்கு பிறகு சைஜா தனது குழந்தைகளோடு தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சிபிராஜின் முதல் மனைவியோடு பேசிய சைஜா குழந்தைகளோடு தனியாக வாழ சிரமப்படுவதாக … Read moreகணவனே போயாச்சு குழந்தைங்க மட்டும் எதுக்கு? தாய் செய்த மோசமான செயல்

எரியும் தீயில் மாடியிலிருந்து குதித்த மாணவர்கள் – சூரத்தில் கொடூரம்

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் மேல் மாடியில் திடீரென தீப்பற்றியது. உயிரை காப்பாற்றி கொள்வதற்காக மாடியிலிருந்து குதித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் ஒன்றின் மாடியில் கோச்சிங் மையம் ஒன்று நடந்து வந்திருக்கிறது. மாலை வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென ஏற்பட்ட தீயால் என்ன செய்வதென்று புரியாமல் 17க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார்கள். அதில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக தற்போது அறிவித்திருக்கும் நிலையில் … Read moreஎரியும் தீயில் மாடியிலிருந்து குதித்த மாணவர்கள் – சூரத்தில் கொடூரம்

அமைச்சரவையை கலைக்க போகிறாரா மோடி?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றதையடுத்து பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. தற்போது நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து பாஜக தலைமை முடிவெடுக்க உள்ளது. இந்நிலையில் மீண்டும் பிரதமராக மோடியே தொடர்வாரா என்பது பற்றியும் அமைச்சரவையில் முடிவெடுக்கப்படும். மே 26 பதவியேற்பு குறித்து குடியரசு தலைவரை சந்திக்க இருக்கிறார்கள். தற்போதைய மக்களவையை கலைத்துவிட்டு மீண்டும் புதிய அவையை கூட்ட வேண்டியிருப்பதால், அதுகுறித்தும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். யார் யாருக்கு என்னென்ன அமைச்சர் பதவிகள் போன்றவற்றை முடிவு … Read moreஅமைச்சரவையை கலைக்க போகிறாரா மோடி?

வாக்களித்த 2 லட்சம் பேருக்கு நன்றி – ஹெச் ராஜா நெகிழ்ச்சி !

சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தோற்றுள்ள ஹெச் ராஜா தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். 17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வியுள்ளது. அதிமுக – பாமக … Read moreவாக்களித்த 2 லட்சம் பேருக்கு நன்றி – ஹெச் ராஜா நெகிழ்ச்சி !

எடப்பாடி பழனிசாமி ஊரில் 800 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்த ஊரில் திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக ஒரு தொகுதியை தவிர அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியான சேலத்திலும் திமுகவே வெற்றி பெற்றது. மக்களவை தேர்தல் அன்று முதல்வர் அவரது எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையத்தில் மக்களோடு மக்களாக வரிசயில் நின்று வாக்களித்தது அப்போது பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் சிலுவம்பாளையம் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வை விட திமுக … Read moreஎடப்பாடி பழனிசாமி ஊரில் 800 வாக்குகள் அதிகம் பெற்ற திமுக

எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி அமைக்கும் மோடி – காங்கிரஸுக்கு அடிமேல் அடி!

மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள  காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. 17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தனிபெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியாக … Read moreஎதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி அமைக்கும் மோடி – காங்கிரஸுக்கு அடிமேல் அடி!

சொல்லி அடிச்ச செந்தில் பாலாஜி: அதிமுக – அமமுகவிற்கு அவமானம்!

நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என கூறியது போல வெற்றி பெற்று தன்னை விமர்சித்த அதிமுக மற்றும் அமமுகவினருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.   செந்தில் பாலாஜி திடீரென திமுகவுக்கு தாவியது டிடிவி தினகரனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதால் செந்தில் பாலாஜியை தோற்கடிக்க தேர்தல் சமயத்தில் அமமுகவினர்களும் அதிமுகவுடன் கைகோர்க்க திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.   முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக பொறுப்பாளராக உள்ள தொகுதி அவர்க்குறிச்சி என்பதால் அங்கு சேந்தில் பாலாஜியை தோற்கடிக்க தனி கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக … Read moreசொல்லி அடிச்ச செந்தில் பாலாஜி: அதிமுக – அமமுகவிற்கு அவமானம்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எழுச்சி பெறுமா?

தமிழகத்தை பொருத்தவரையில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை என்றாலும் தமிழக மக்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சியை கடந்த பல வருடங்களாக தேடி வருகின்றனர். ஆனால் புதிய கட்சிகள் மக்களின் நம்பிக்கையை பெற தவறி வருகின்றன. நாம் தமிழர், போன்ற ஒருசில புதிய கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்தபோதிலும் தேர்தல் அரசியலில் வெற்றி காண முடியவில்லை இந்த நிலையில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை … Read moreகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எழுச்சி பெறுமா?