236 பேரின் பணி நியமன உத்தரவு ரத்து..!

ஆவின் நிறுவனத்தில் 2020 – 2021-ம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் காலியாக இருந்த மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்களின் பணியிடங்கள் கடந்த 2020 – 2021-ம் ஆண்டுகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்பட்டன. இதையடுத்து, தகுதியில்லாத நபர்களுக்கு பணி வழங்கியது, எழுத்துத் தேர்வு வினாத்தாள் வெளியானது, தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் … Read more

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: காயத்ரி ரகுராம் பகீர் குற்றச்சாட்டு..!

அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து யாரும் கவலை கொள்வதில்லை. உண்மை தொண்டர்களை கட்சியில் இருந்து … Read more

ஜிஎஸ்டி கவுன்சில் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுகிறது என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார். ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுவதில் பல சிக்கல்கள் இருக்கிறது. 3 மாதத்துக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற வேண்டும் ஆனால் அவ்வாறு நடப்பதில்லை. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி எப்படி கணக்கிடப்பட்டு மாநிலங்களுக்கு அளிக்கப்படுகிறது என யாருக்கும் புரிவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் நிலச்சரிவு : 16 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேர் உயிரிழந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் தனியார் வேளாண்மை பண்ணை அருகே பலர் தங்கிருந்துள்ளனர். இந்நிலையில், இந்த வேளாண்மை பண்ணையில் இன்று (16) அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை … Read more

ஜம்மு – காஷ்மீரில், நான்கு பயங்கரவாதிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் : என்.ஐ.ஏ போஸ்டர் ஒட்டி அறிவிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டி.ஆர்.எப். எனப்படும் எதிர்ப்பு முன்னணி, நாட்டில் பல இடங்களில் வன்முறை நிகழ்த்த திட்டமிட்டு, இளைஞர்களை திரட்டி மூளைச்சலவை செய்து வருகிறது.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, இரு பாகிஸ்தானியர் உட்பட நான்கு பயங்கரவாதிகளைத் தேடி வருகிறது. இதற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த சலீம் ரெஹ்மானி, சைபுல்லா சஜித் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சஜ்ஜத் குல், பசித் அஹ்மத் … Read more

நான் சாதாரண ஸ்டாலின் அல்ல- முதல்வர் பேச்சு| Dinamalar

சென்னை: ”நான் சாதாரண ஸ்டாலின் அல்ல… தமிழகத்தை நிச்சயமாக நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன்”, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக அலுவலகத்தில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டுள்ளீர்கள். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆட்சிக்கு வந்த போது கோவிட் தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை … Read more

மாண்டஸ் புயல் | சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: மாண்டஸ் புயல் மற்றும் கன மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (டிச.9) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மாண்டஸ் புயல்: மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் … Read more

குஜராத்தில் வரலாற்று வெற்றியுடன் மீண்டும் பாஜக ஆட்சி; இமாச்சலைக் கைப்பற்றியது காங்கிரஸ்

அகமதாபாத் / ஷிம்லா: குஜராத்தில் வரலாற்று வெற்றியுடன் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடைசித் தேர்தலாக அமைந்துவிட்ட குஜராத் சட்டப்பேரவை, இமாச்சலப் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் தலா ஒரு வெற்றியோடு நிறைவு செய்துள்ளன. இந்தத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது பற்றிய தொகுப்பு இதோ.. குஜராத்தில் வரலாற்று வெற்றி: குஜராத்தைப் பொறுத்தவரை பாஜக தனது சொந்த வரலாற்று சாதனையை உடைத்தது மட்டுமல்லாமல், புதிய வரலாற்றையும் … Read more

மிரட்டும் மாண்டஸ் புயல்: எச்சரிக்கை பணிகள் தீவிரம்- தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து கடலோரப் பகுதிகளில் சார் ஆட்சியர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மதுக்கூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் மௌலானா தோப்பில் இந்து காட்டு நாயக்கன் பழங்குடி சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா ஜாதி சான்றிதழ் முதல்வர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட அரசு சலுகைகளை … Read more

திமுகவில் இணைந்தது ஏன்..?: கோவை செல்வராஜ் விளக்கம்..!

சமூக நீதி பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் செயல்பட வந்துள்ளேன் என்று, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார். இதன்பிறகு இன்று (டிச..7-ம் தேதி) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். … Read more