மொத்தமாக புரட்டிப்போட்ட புயல்… வாகனத்துடன் பூமிக்குள் புதைந்த தாயாரும் மகளும்

கலிபோர்னியா மாகாணத்தை மொத்தமாக தாக்கிய புயலுக்கு நடுவே, சாலையில் பயணித்த தாயாரும் மகளும் திடீரென்று உருவான குழிக்குள் புதைந்து போன சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளத்தில் புதைந்த தாயார், மகள் அதிர்ஷ்டவசமாக, துணிவாக செயல்பட்ட மீட்புக்குழுவினரால் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். திங்களன்று சுமார் 7.20 மனியளவிலேயே குறித்த சம்பவம் Chatsworth பகுதியில் ஏற்பட்டுள்ளது. @getty சாலையில் திடீரென்று 15 அடி பள்ளம் உருவாகி, அதில் இரண்டு வாகனங்கள் சிக்கியுள்ளது. தாயாரும் மகளும் பயணித்த கார் ஒன்று, … Read more

லாரி மீது ஏறி நடனம் ஆடிக்கொண்டே கீழே குதித்த துணிவு ரசிகருக்கு நேர்ந்த விபரீதம்!

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இன்று நள்ளிரவு 1 மணிக்கு ரோகினி திரையரங்கில் வெளியான துணிவு பட சிறப்பு காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். அப்போது அதில் ரசிகர் ஒருவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த ட்ரெய்லர் லாரி மீது ஏறி நடனம் ஆடியபடி கீழே குதித்த போது, அவருக்கு  முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டது. … Read more

அதிர்ச்சி! திருப்பதியில் ரூம் வாடகை மூன்று மடங்கு உயர்வு!!

திருப்பதியில் தங்கும் அறை வாடகை 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி விருந்தினர் மாளிகை பகுதியில் இருக்கும் நான்காவது கட்டட தொகுதியில் இதுவரை அறை ஒன்றுக்கு நாள் வாடகை 750 ரூபாயாக இருந்தது. அங்குள்ள அறைகளை மராமத்து செய்த தேவஸ்தான நிர்வாகம் அவற்றின் வாடகையை தலா 1,700 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெஷல் டைப் காட்டேஜ்களின் ஒரு நாள் வாடகையை 750 ரூபாயில் இருந்து 2200 … Read more

தீர்மானம் கொண்டு வந்த முதல்வர்; பாதியில் வெளியேறிய ஆளுநர்: சட்டப்பேரவையில் பரபரப்பு

சென்னை: அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார். இதன்படி காலை.10.50 மணி வரை ஆளுநர் தனது … Read more

Motorola Satellite Phone: உலகின் முதல் Satellite Android போன் வெளியிட மோட்டோரோலா திட்டம்!

Motorola நிறுவனம் சமீபகாலமாக Android ஸ்மார்ட்போன் விற்பனையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. குறிப்பாக பட்ஜெட் மற்றும் பிரீமியம் என்ட்ரி லெவல் செக்மென்ட்டில் பல புதிய வசதிகளுடன் போன்களை அறிமுகம் செய்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. தற்போது ஸ்மார்ட்போன் துறையில் புதிய புரட்சியாக இருக்கக்கூடிய SOS எனப்படும் Satellite வசதியை ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 ப்ரோ மாடலில் அறிமுகம் செய்தது. இந்த வசதி மிகப்பெரிய அளவு உலகம் முழுவதும் பேசப்பட்டுவருகிறது. இதே வசதியை தற்போது … Read more

வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கேரள: வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடாது என கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29-ம் தேதிகளில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்ககோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் அமர்வு விசாரித்தது. … Read more

அதிமுக யாருக்கு? வெள்ளைக்கொடிக்கு வெற்றியா? எடப்பாடிக்கு அத்தனை பக்கமும் நோ என்ட்ரி!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வர வாய்ப்புகள் உள்ளன, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரது ரியாக்‌ஷன் என்ன என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு தேதி!அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இந்த வாரத்துக்குள் வழக்கை முடிக்க நினைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள நிலையில் இன்றுடன் விசாரணை நிறைவடைந்து, இரு தரப்பு வாதங்களையும் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு … Read more

Budget 2023-ல் நல்ல செய்தி: 10 லட்சம் வருமானத்துக்கு வரி இவ்வளவுதான், மாறுகிறது Tax Slab!

வருமான வரி ஸ்லாப்: இன்னும் சில நாட்களின் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் வரி தொடர்பான பெரிய மாற்றங்களுக்கான திட்டத்தை மோடி அரசு வகுத்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் புதிய வருமான வரி ஸ்லேபுகளை சேர்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக 5 முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் குறைந்த வரி செலுத்தினால் போதுமானதாக இருக்கும். இந்த முறை நடுத்தர மக்களுக்கு பெரிய பரிசை வழங்க நிதியமைச்சர் … Read more

உலகம் முழுவதும் 20 கோடி ட்விட்டர் பயனாளர்களின் விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நிறுவனம் தகவல்..!

உலகம் முழுவதும் 20 கோடி ட்விட்டர் பயனாளர்கள் பற்றிய விபரங்கள் திருடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இணையதள கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக் தெரிவித்துள்ளது. இந்த பயனாளர்களின் மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி எண்களும் திருடப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம், இதன் பின்னணியில் உள்ள ஹேக்கர்களின் இருப்பிடம் பற்றி தெரியவில்லை என்று கூறியுள்ளது. இந்த விபரங்கள் கடந்த 2021ம் ஆண்டிலேயே நடந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள ஹட்சன் ராக் நிறுவனம், ட்விட்டர் நிறுவனத்தை எலன் மாஸ்க் வாங்குவதற்கு முன்னதாகவே இவை நடந்திருக்கலாம் என்றும் … Read more

காஷ்மீர் சர்வதேச எல்லையில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு: தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க நடவடிக்கை..!

சம்பா: ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா சர்வதேச எல்லை பகுதியில் 2 மாதத்திற்கு இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் தாங்கிரி கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 3 வீடுகளை குறிவைத்து அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ப்ரீதம் லால் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஷ்மீரில் சமீபகாலமாக குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பொதுமக்கள் … Read more