கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கும், ஊழியருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை…சினிமா பாணியில் நடந்த சம்பவம்!

அமெரிக்கா கலிபோர்னியா மாகணத்தில் கடையில் திருட வந்த கொள்ளையர்களுக்கும், ஊழியருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் சிசிடிவி வெளியாகி உள்ளது. துப்பாகிகளுடன் கடையில் கொள்ளையடிக்க வந்த நான்கு பேர், வாக்குவாதம் செய்த ஊழியரை நோக்கி சுட்டனர். சுதாரித்து ஊழியர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு கொள்ளையன் குண்டடிபட்டு உயிரிழந்தான். மற்றொரு கொள்ளையன் பிடிப்பட்ட நிலையில், தப்பிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சரமாரி துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவத்தின் சிசிடிவியை போலீசார் வெளியிட்டுள்ளனர். Source link

அழகான 9 மனைவிகள்: டைம் டேபிள் போட்டு காதலிக்கும் காதல் கணவன் ஆனாலும் நேரம் பத்தலையே

மனைவியை காதலிக்க நேரம் ஒதுக்கி வாழும் மனிதரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆனால், 9 மனைவிகள், அதுவும் அழகான மனைவிகள் இருந்தால், பாவம் கணவர் என்ன செய்வார்? ஆனால் வருத்தம் என்னவென்றால், காதலுக்காக டைம் டேபிள் போட்டாலும் அதை சரிவர கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கிறதாம்!  பிரேசிலில் வசிக்கும் ஆர்தர் ஓ உர்சோ 9 பெண்களை திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.  இப்போது அவர் அனைவருக்கும் உரிய நேரத்தை வழங்காததால் கவலைப்படுகிறார். மனைவிகள் அனைவரும் அவருடன் … Read more

விக்ரம் அப்டேட்: டிரெய்லர் Locked and Loading… தமிழ் சினிமாவில் ஒரு மெட்டாவெர்ஸ் முயற்சி!

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்கள் நடிக்கும் பான் இந்தியா படமான ‘விக்ரம்’ வரும் ஜூன் மாதத்தில் வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்திற்கான போஸ்டரை ரயிலில் பிரிண்ட் செய்து ப்ரோமோஷன் செய்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து தற்போது படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தங்களின் சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்கள். Glad … Read more

கூடலூர்: பூனைக் குட்டி என நினைத்து சிறுத்தை குட்டியை தூக்கி வந்த தேயிலை தொழிலாளர்கள்

கூடலூரில் தேயிலைத் தோட்டத்தில் கிடந்த சிறுத்தை குட்டியை பூனைக் குட்டி என நினைத்து அதனை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கையில் தூக்கி வந்தனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டி ஒன்று கிடந்துள்ளது. இதனை பூனைக் குட்டி என நினைத்த தொழிலாளர்கள் கையில் … Read more

பாலியல் தொந்தரவு செய்து சிறுமி தலையை துண்டித்து படுகொலை செய்த கொடூரனுக்கு தூக்கு தண்டனை..!

சேலம் – தூக்குத் தண்டனை விதிப்பு சிறுமி தலையை துண்டித்துக் படுகொலை சிறுமியை கொன்ற கொடூரனுக்கு தூக்கு தண்டனை சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலியல் சீண்டலில் சிறுமியின் தலையை துண்டித்துக் கொலை செய்த வழக்கு பாலியல் தொந்தரவு செய்து சிறுமியை கொடூரமாக கொன்ற குற்றவாளி தினேஷ் குமாருக்கு தூக்குத் தண்டனை கடந்த 2018ஆம் ஆண்டு பூ கட்டுவதற்கு நூல் கேட்ட சிறுமியிடம் பாலியல் சீண்டலில் தினேஷ் குமார் ஈடுபட்டிருக்கிறான் பாலியல் சீண்டலை எதிர்த்த சிறுமியை தாக்கி … Read more

எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர் – 44 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல்

வாஷிங்டன்: சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், டுவிட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின், டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார். இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்துடன் … Read more

“பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்”- பாக்யராஜ் பேச்சு

“பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று கருதப்பட வேண்டியவர்கள்” என நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் பேசியுள்ளார். “பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கமலாலயத்திலுள்ள பாஜக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த நூலை வெளியிட்டார். அவரிடமிருந்து இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் புத்தகத்தை பெற்றுக்கொண்டார். புத்தகத்தை பெற்றுக்கொண்ட பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பாக்யராஜ், “பா.ஜ.க மாநில தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டது … Read more

கேஸ் சப்ளை கட், கச்சா எண்ணெய் 300 டாலர்.. அமெரிக்கா, ஐரோப்பாவை எச்சரிக்கும் ரஷ்யா..!

ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் உலக நாடுகள் தற்போது அதிகப்படியான கச்சா எண்ணெய் விலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யா-வை மொத்தமாக முடக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவும் ஐரோப்பாவும் இணைந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மீது தடை விதிக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் கடுப்பான ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரஷ்யா எண்ணெய் மற்றும் எரிவாயு மீது கைவைத்தால் கச்சா எண்ணெய் ஒரு பேரல் … Read more

நிர்மலா சீதாராமனை தூங்க விடாமல் செய்த மதுரை எம்.பி; ஏன் தெரியுமா?

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. மார்ச் 6-ம் தேதி வரை 500க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்கச்சென்ற ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்க மத்திய அரசு ’ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மூலம் இதுவரை சுமார் ஐந்தாயிரம் மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

நயன்தாராவுக்கு முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?

2003ம் ஆண்டு வெளியான மனசினக்கரே மலையாள படம் மூலம் நடிகையானார் நயன்தாரா. ஜெயராம் ஹீரோவாக நடித்த அந்த படத்தில் ஷீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கௌரி என்கிற கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்தார். படத்தின் முக்கிய அம்சமாக ஷீலாவின் கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்று நினைத்தார் இயக்குநர் சத்யன் அந்திக்காடு. அதனால் கௌரி கதாபாத்திரத்தில் புதுமுகம் தான் நடிக்க வேண்டும் என்றார் சத்யன். அந்த நேரத்தில் நயன்தாரா ஒரு மாடல் அழகியாக இருந்தார். விளம்பர படங்களில் நடித்து வந்தார். … Read more