'ஹோலி பண்டிகை புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொண்டு வரட்டும்' – பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை நாளை(25-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்றைய தினமே பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அதோடு இன்று ‘ஹோலிகா தஹன்’ என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஹோலி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டில் உள்ள எனது குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஹோலி நல்வாழ்த்துக்கள். பாசம் மற்றும் … Read more

இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பா.ஜ.க.வில் இணைந்தார்

புதுடெல்லி, 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் ஆர்.கே.எஸ்.பதவுரியா பா.ஜ.க.வில் இணைந்தார். அதே போல் திருப்பதி முன்னாள் எம்.பி. … Read more

40 ஆண்டுகளுக்கும் மேலான கொலை வழக்கு… குற்றவாளியைக் காட்டிக்கொடுத்த சூயிங்கம்!

அமெரிக்காவில் 1980-ல் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர், கிட்டத்தட்ட 40 வருடங்களுக்குப் பிறகு ஒரு சூயிங்கத்தால் குற்றவாளி என நிரூபணமாகியிருக்கிறார். முன்னதாக, அமெரிக்காவின் ஓரிகான் (Oregon) மாகாணத்தில் சரியாக 1980 ஜனவரி 15-ல், மவுண்ட் ஹூட் சமுதாயக் கல்லூரி (Mt. Hood Community College) மாணவியான பார்பரா டக்கர் (Barbara Tucker) என்ற 19 வயது பெண், வளாக வாகன நிறுத்துமிடம் அருகே அடித்துக் கொல்லப்பட்டுக் கிடந்தார். பார்பரா டக்கர் (Barbara Tucker) மறுநாள் காலை கல்லூரிக்கு … Read more

மதிமுக எம் பி தற்கொலை முயற்சியா:?  ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி செய்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரோடு தொகுதி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் நேரடியாக தி.மு.க. போட்டியிடுகிறது. திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி பிரசாரத்தை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக கணேசமூர்த்தி அருகில் உள்ள … Read more

'கடினமான நேரத்திலும் கெஜ்ரிவால் மக்களை பற்றியே சிந்திக்கிறார்' – டெல்லி மந்திரி அதிஷி பேட்டி

புதுடெல்லி, டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். பின்னர், அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 22-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவாலை 6 நாட்கள்(வரும் 28-ந்தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க … Read more

Premature ejaculation: விந்து முந்துதா… உங்ககிட்டேயே தீர்வு இருக்கு..! – காமத்துக்கு மரியாதை 153

உலகம் முழுக்க தம்பதியரிடையே உடலளவில் இருக்கிற ஒரு பிரச்னை விந்து முந்துதல். பலருடைய தாம்பத்திய உறவையும் சிக்கலாக்கிக் கொண்டிருப்பது இந்தப் பிரச்னைதான். இதற்கான தீர்வுகளை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த, பாலியல் மருத்துவர் காமராஜ். ”உலகம் முழுக்க பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கிற முக்கியமான பிரச்னை விந்து முந்துதல்தான். இந்தப் பிரச்னை உலகம் முழுக்க 70 சதவிகித ஆண்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபட ஆரம்பித்த இரண்டே நிமிடங்களில் விந்து வெளியேறி விடும். இது சம்பந்தப்பட்ட … Read more

வீட்டில் இருந்தே முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கலாம்

சென்னை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் எனச் சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தற்போது வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை … Read more

குக்கருடன் வலம்வந்த டிடிவி | இபிஎஸ் பிரசாரம் | தேர்தல் அலுவலர் பயிற்சி வகுப்பு – Election Clicks

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நிலை அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி – ஊட்டி தேர்தல் அலுவலருக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் ராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆர். ஏ.புரம் நெல்லையில் காங்கிரஸார் போராட்டம் Source link

கெஜ்ரிவால் கைதை எதிர்த்து இந்தியா கூட்டணி மாபெரும் பேரணி

டில்லி வரும் ஞாயிறு அன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து. விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும்   கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை 21 ஆம் தேதி இரவு கைது செய்து அவர் டில்லி … Read more