ஹிஜாப் மாணவிக்கு ஆதரவு தெரிவித்த RSS: முஸ்லீம் இந்து இருவரும் ஒரே DNA என கருத்து


கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து, முஸ்கன் கான் என்ற மாணவியை இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷமிட்டனர்.இந்த நிலையில் இதற்கு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் இஸ்லாமிய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கல்லுரிக்குள் வந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை சுற்றி சில இந்து அமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர், அதனை தொடர்ந்து முஸ்கன் கான் என்ற அந்த பெண்ணும் அல்லாஹ் ஹு அக்பர் முழக்கமிட்டார்.

இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் பெரும் விவாதத்திற்கு உள்ளான நிலையில் ஹிஜாப் மற்றும் புர்கா ஆகிய இரண்டுமே இந்தியாவின் கலாச்சாரம் தான் என இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து அந்த அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் என்ற அமைப்பு மாணவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அந்த அமைப்பின் சஞ்சலக் அணில் சிங்க், முஸ்கன் கான் என்ற பெண்ணை தாங்கள் ஆதரிப்பதாகவும்,இந்த சமூகத்தில் அவள் நமது மகள் மற்றும் சகோதரி போன்றவள் எனவும் தெரிவித்தார்.

மேலும் மாணவர்களின் செயல் மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷமிட்டது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த செயலை மாணவர்கள் செய்ததன் மூலம் இந்து கலாச்சாரத்துக்கு
அவதூறு ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இஸ்லாமியர்கள் நமது சகோதர்கள் என்றும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் ஒரே DNA கொண்டவர்கள் எனவும் RSSயின் தலைவர் சர்சங் சளக் கருத்து தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.