பஞ்சாபி நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழப்பு

பஞ்சாப் மாநில நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் சோனிபட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதனை சோனிபட் போலீசார் உறுதி செய்துள்ளனர். 2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டை வன்முறை வழக்கில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 
37 வயதான அவர் 2015 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மொத்தம் ஆறு படங்களில் அவர் நடித்துள்ளார். 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.