பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 14-ம் தேதி கூடுகிறது

புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி மாதம் 31-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11-ம் தேதி வரை நடைபெற்றது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கடந்த மாதம் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 
இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் மக்களவை, மாநிலங்களவை காலை 11 மணி முதல் ஒரே நேரத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.