ஜம்மு:
ஜம்மு காஷ்மீன் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காஷ்மீர் ஐஜி விஜய்குமார் கூறுகையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் சமீபத்திய பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தெரிவித்தார்.