சாலையில் இருந்த பிச்சைக்காரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த செல்வந்தர்! பெரும் கவனத்தை ஈர்த்த வீடியோ

நைஜீரியாவில் பெரும் செல்வந்தர் ஒருவர் பிச்சை எடுக்கும் பெண் தன் மீது காட்டிய கருணைக்காக பெருந்தொகை ஒன்றை பரிசாக கொடுத்த நெகிழ்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. டி ஜெனரல் என்பவர் நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும் செல்வந்தரான இவர் சாலையில் சென்ற போது பெண்ணொருவர் பிச்சை எடுத்து கொண்டிருப்பதை கண்டார். உடனே அவரிடம் சென்ற டி ஜெனரல், தனக்கு பசிக்கிறது எனவும் எதாவது பணம் இருந்தால் கொடுத்து உதவுமாறும் அந்த பிச்சைக்காரியிடம் கேட்டார். இதையடுத்து சற்று யோசிக்காத அந்த … Read more

திரிபுரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிப்லப் குமார் தேவ்

பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தில் அதன் முதல்வராக இருக்கும் பிப்லப் குமார் தேவ் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்ற போதும் நேற்று அவர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் திரிபுரா மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. வின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் … Read more

இதுவரை நடந்த 10,11,12-ம் வகுப்பு தேர்வுகளில் 2.4 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட் – பள்ளிக் கல்வித்துறை

சென்னை: தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வினை 8.37 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 பேரும் அடங்குவார்கள். 11-ம் வகுபபு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள். 4 லட்சத்து … Read more

காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாட்டில் பங்கேற்ற விஜய் வசந்த்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் “சிந்தனை அமர்வு” மாநாட்டில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். கட்சிக்கு புத்துயிர் ஊட்டவும் பலப்படுத்தவும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பல்வேறு யோசனைகளை முன் வைத்துள்ளனர்.  கட்சியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஏனைய தலைவர்களுடன் இந்த மாநாட்டில் கலந்து கொள்வது பெருமையளிப்பதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

ரஷியாவிற்கு உதவ வேண்டாம்- சீனாவுக்கு ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

வெய்செனாஸ் (ஜெர்மனி): உக்ரைனில் நடக்கும் போர், ஏழை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டுவதாக ஜி7 கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் உக்ரைனை விட்டு தானியங்கள் வெளியேறுவதை ரஷியா தடுப்பதாகவும், இதை சரி செய்ய அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் ஜி7 அமைப்பு தெரிவித்துள்ளது.  மேலும், சர்வதேச தடைகளை குறைத்து மதிப்பிடுவது அல்லது உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உட்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என்று சீனாவை ஜி7 நாடுகள் … Read more

திருவண்ணாமலை மலை பகுதியில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையில் நடைபெறும் குவாரி நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மலைகளை உடைக்க அதிநவீன இயந்திரங்கள், வெடிபொருட்களை பயன்படுத்துவதால் கற்கள் சிதறி தெறிப்பதாக மனுவில் தகவல் அளிக்கப்பட்டது.

பஞ்சாபில் குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து: உயிர்சேதம் இல்லை என தகவல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குருநானக் தேவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

30 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல்-ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் செய்யும் காரியம்!

தனுஷ்கோடியில் தொடர்ந்து மூன்று நாட்களாக கடல் சீற்றம் நீடித்துவரும்நிலையில், 30 அடிக்கு மேல் ஆக்ரோஷத்துடன் எழும் கடல் அலைகளுக்கு இடையே, சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்கும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. அசானி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடைக் காலத்திலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த காற்றின் வேகத்தால், … Read more

நேற்று அமித் ஷா உடன் சந்திப்பு – இன்று திரிபுரா முதல்வர் பதவியிலிருந்து பிப்லாப் ராஜினாமா

பாஜக கட்சியைச் சேர்ந்த திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திரிபுராவில் 25 ஆண்டுகாலமாக இடதுசாரி கட்சி ஆட்சி அமைத்து வந்தநிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கடந்த 2018-ம் ஆண்டு பிப்லாப் குமார் தேப் தலைமையில் பாஜக கட்சி ஆட்சிப் பிடித்து சாதனை புரிந்தது. இதையடுத்து திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பிப்லாப் குமார் தேப் பதவி வகித்து வந்தார். இதற்கிடையில், சர்ச்சை பேச்சு, சர்ச்சை கருத்துக்கள் என கூறி வந்ததாக … Read more

‘கேஜிஎஃப் 3’ படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? – வெளியானது மாஸ் அப்டேட்ஸ்!

’கேஜிஎஃப் 3’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார், தயாரிப்பாளர் விஜய் கிரகந்த். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கேஜிஎஃப் 2’ வசூலில் ரூ.1000 கோடி ரூபாய்யை கடந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுவும், ‘கேஜிஎஃப் 2’ வெற்றியால் பாலிவுட் கதிகலங்கிப் போயுள்ளது. பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படங்களில் ‘பாகுபலி2’-க்கு அடுத்த ‘டான்’ நான் என ‘கேஜிஎஃப் 2’ இரண்டாம் இடத்தைப் பிடித்து தென்னிந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. தமிழகத்திலேயே முன்னணி நடிகர்களின் … Read more