அடுத்த அலைக்கு ஆயத்தமாகிறதா சீனா!?

சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த அலை ஏற்பட உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பீஜிங்கில் தொற்று எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. அதைக் கட்டுப்படுத்த சீன அரசு ஊரடங்கு, உள்ளிட்டக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது.

இதனால் 2 வாரங்களுக்கு முன்னிருந்து பீஜிங் அரசு கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில், பீஜிங்கில்   வணிக சந்தைகள் அதிகம் காணப்படும் சாயோயாங் பகுதியில் தொற்று  எண்ணிக்கை வேகம் எடுத்துள்ளது.

china covid

அங்குள்ள ஹெவன்  சூப்பர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில் மட்டும் சுமார் 61 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. அவர்களின் தொடர்புகள் 115 என  தொற்றுகள் கணக்கிடப்பட்டுள்ளன.

அந்த மதுபான விடுதி கொரோனா பரவலின் மையமாக அடையாளப்படுத்தபட்டு அங்கு வந்து சென்ற அனைவருக்கும் பரிசோதனை நடைபெற்று  வருகிறதுசீனாவின் வர்த்தக நகரமான ஷாங்காய் நகரத்தில் அழகு நிலையம் ஒன்று பரவலின் மையமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு வந்து சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

china covid

மொத்தத்தில், சீனாவில் ஜூன் 10 ஆம் தேதியில் 210 புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளன, அவற்றில் 79 பேருக்கு அறிகுறிகளும்  131  பேருக்கு அறிகுறிகள் இல்லை என்றும்  தேசிய சுகாதார ஆணையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

newstm.in

 


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.