பால்கர் :மஹாராஷ்டிராவில் பழங்குடியின பெண்ணுக்கு, மருத்துவமனை செல்லும் வழியில் நடுக்காட்டிலேயே குழந்தை பிறந்தது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பால்கர் மாவட்டத்தில் உள்ள எய்னா என்ற மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்ணுக்கு, சமீபத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
அந்தக் கிராமத்தில் இருந்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால், உறவினர்கள் அப்பெண்ணை தொட்டிலில் வைத்து, காட்டுப்பகுதி வழியாக துாக்கிச் சென்றனர். ஆனால், பிரசவ வலி தாங்க முடியாத அப்பெண்ணுக்கு நடுக்காட்டிலேயே பிரசவமானது. இதன் பின் தாயையும், பெண் குழந்தையையும் உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.’மலைக் கிராமங்களில் சாலை வசதி இல்லாததால், இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பால்கர் மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement