மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தார் வழியாக மும்பைக்கு பயணித்த பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்திவருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நபரின் உடமைகளை சோதனை செய்ததில், அவரிடம் 16 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கானா நாட்டைச் சேர்ந்த அந்த பயணி மற்றும் பெண்ணை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கானா நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டார்.
அப்பெண் கடத்தப்பட்ட போதை பொருட்களை டெல்லியில் டெலிவரி செய்யவிருந்தார். கைப்பற்றப்பட்ட ஹெராயினின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
newstm.in