மறைந்த தனது கணவருக்குக் கிடைத்த ஃபிலிம்பேர் விருதுடன் உருக்கமான பதிவொன்றை நடிகை மேக்னா ராஜ் வெளியிட்டுள்ளார்.
நடிகை மேக்னா ராஜ், பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2020ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் இறக்கும் போது, மேக்னா கர்ப்பமாக இருந்தார்.
சில மாதங்கள் கழித்து மேக்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராயன் ராஜ் சர்ஜா என்று பெயர் வைத்தார். இதனையடுத்து, மேக்னா தனது மகனுடன் இருக்கும் போட்டோக்களையும், வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
நடந்து முடிந்த ஃபிலிம் ஃபேர் சவுத் 2022 விழாவில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரின் மனைவி மேக்னா ராஜ் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள மேக்னா, நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். மக்கள் உங்களை அதிகம் நேசித்துள்ளார்கள். அதனால் தான் நீங்கள் இதை பெற்றிருக்கிறீர்கள் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
newstm.in