முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தூங்க விடுங்கள் என்று திமுகவினருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக பொதுக்குழுவில் ஒரு மணி நேரத்திற்கு மேல் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேச்சு பாஜகவினை சுற்றி தான் இருந்தது என்று தெரிவித்தார்.
இந்தி திணிப்பு என்பதை காங்கிரஸ் தான் செய்தது என்று கூறிய அண்ணாமலை, தற்போது மத்திய அரசு மூன்று மொழியை படிக்க வேண்டும் என்று தான் சொல்லி வருகின்றது என்றார்.
வரும் 15ஆம் தேதி திமுக இளைஞரணி , மாணவர் அணி போராட்டம் என சொல்லி உள்ளனர். ஆனால் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பு இல்லை. தானும் அங்கே தான் படித்துள்ளதாக கூறினார்.
இந்தி திணிப்பு என்று மத்திய அரசு செய்தால் நிச்சயம் தமிழக பாஜக அதனை எதிர்க்கும் எனவும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தூங்கவிடுங்கள் என திமுகவினருக்கு வேண்டுகோள் வைக்கின்றேன் என அவர் கூறினார்.
newstm.in
