
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியில் உள்ள 3 வயது சிறுவன் தன் தாயிடம் சென்று சாக்லேட் மற்றும் மிட்டாய் கேட்டுள்ளான். ஆனால் அவர் சிறுவனுக்கு தராமல் ஒளித்து வைத்ததாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த சிறுவன் தன் தந்தையிடம் சென்று அம்மா தனது சாக்லேட்களை திருடி விட்டார் என்றும், அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் என மழலை பேச்சில் கூறியுள்ளான்.

சிறுவனின் அப்பாவித்தனமான பேச்சை கேட்டு பெற்றோருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் சிறுவனின் வற்புறுத்தலால் குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது காவல் நிலையத்தில் இருந்த எஸ்ஐ பிரியங்கா நாயக்கிடம் சிறுவன் தன் தாய் மீது புகார் அளித்தார். சிறுவன் கூற கூற எஸ்ஐ பிரியங்கா நாயக் எழுதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிறுவன் தன் தாய் சாக்லேட் மற்றும் மிட்டாய்களைத் திருடுவதைப் பற்றி தொடர்ந்து புகார் கூற, அருகில் இருந்த அனைவரும் சிரித்து ரசித்தனர்.