குட் நியூஸ்..!! இனி பணம் செலுத்தாமலே ரயில் டிக்கெட் வாங்கலாம்.. எப்படி தெரியுமா ?

ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பணமே செலுத்தாமல் முன்பதிவு செய்யும் திட்டத்தை விரைவில் ஐஆர்சிடிசி அறிவிக்க உள்ளது. பல்வேறு ஆன்லைன் வர்த்தகங்கள் தற்போது எல்லாம் Buy Now Pay Later என்ற திட்டம் மூலம் பொருள்களை தேவைப்படும் போது வாங்கிக்கொண்டு, பின்னர் ஒரு மாதம் கழித்து பணத்தை கட்டி கொள்ளலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை.

இதே முறையை தற்போது IRCTC-ரயில் டிக்கெட்டில் அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, ஐஆர்சிடிசி கேஷ்-இ என்ற நிறுவனத்துடன் இணைந்து ‘Travel Now Pay Later’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பயணிகள் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கான பணத்தை கேஷ்-இ நிறுவனம் செலுத்தி விடும். அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு, பயணிகளிடம் இருந்து இ.எம்.ஐ வசதி அல்லது தவணை முறை மூலம் பணத்தை வசூல் செய்து கொள்ளும். இதற்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.