2022-ம் ஆண்டுத் துவக்கம் முதல் இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வருகிறது. இதனால் ஊழியர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க டெக் மற்றும் ரீடைல் பங்குகள் சரிவைத் தொடர்ந்து இந்திய ஐடி நிறுவனப் பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
இதனால் டெஸ்லா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், கூகுள், நெட்பிளிக்ஸ் என அனைத்து முன்னணி டெக் நிறுவனங்களும் ஊழியர்களைக் கடந்த 6 மாதங்களாகப் படிப்படியாகப் பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையில் இயங்கி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் எக்ஸ்பாக்ஸ், எட்ஜ் குறிப்பிட்ட பல அணிகளில் இருந்து சுமார் 1000-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இதை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவின் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் விண்டோஸ் லைசென்ஸ் கொண்ட கம்ப்யூட்டர் விற்பனையும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்ஃபேஸ் கணினி பிரிவில் சர்ஃபேஸ் லேப்டாப் 5, சர்ஃபேஸ் 9 ப்ரோ டாப்லட், ஸ்டியோ 2+ ஆகியவற்றை அறிமுகம் செய்தது. ஜூலை காலாண்டில் கடந்த 5 வருடத்தில் கண்டிராத வகையில் வருவாயில் மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.