வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் குறித்து தெரிந்து கொள்ளும் வகையிலான செயலி அறிமுகப்பட்டுள்ளது.
Road Ease என்ற செயலி மூலம் சாலை மூடல் மற்றும் மாற்றுப் பாதை குறித்து வாகன ஓட்டிகள் கூகுள் மேப்-இல், நிகழ்நேரத்தில் தெரிந்து கொள்ளலாம். செயலியின் தொடக்க நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செயலியை தொடங்கி வைத்தார். இந்த செயலியானது கூகுள் மேப் உதவியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 15 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த செயலி அப்டேட் ஆகும்.
இந்த செயலியில் எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரை எவ்வளவு நேரம் போக்குவரத்து மாற்றம், சாலை முடக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிந்துக்கொள்ளலாம்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புதிய போக்குவரத்து விதிமீறல் அபராதத்தொகையானது வரும் 28ம் தேதியிலிருந்து அமல்படுத்தபட உள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பருக்கு ரூ.500 வரை அபராதம். ஸ்டாப் லைன் விதிமீறலுக்கு ரூ.500-1500 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
பைக் ரேஸில் ஈடுப்பட்டு முதல் முறை பிடிபட்டால் 15 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வாகனம் ஓட்டிக்கொண்டே செல்போன் பேசி முதல் முறை பிடிபட்டால் ரூ 1000 அபராதம். அதற்கு மேல் செல்போன் பேசி வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
குறிப்பாக மது அருந்தி இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுபவருடன் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த முறை சட்டத்தில் இடம் உள்ளது. அனைத்து வழக்கிலும் இந்த அபராதம் விதிக்கப்பட மாட்டாது. அதன் தன்மை பொருத்து உடன் செல்பவருக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
newstm.in