வாழ்த்துகள் வைரமுத்து சார்.. பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்.. சின்மயி பதிலடி..!

பிரபல பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில், சமீபத்தில் ஆண் மற்றும் பெண் என இரட்டைக் குழந்தை பிறந்தது. தனக்கு ட்ரிப்டா மற்றும் ஷ்ரவாஸ் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்ததை இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார் சின்மயி.

ஆனால், அவர் கர்ப்பமாக இருந்த காலத்தில் எந்த படத்தையும் பதிவிடவில்லை என்பதால், ‘சின்மயி வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு பதிலடி தரும் விதமாக, 32-வது வார கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்தார் சின்மயி.

அதோடு, இரட்டைக் குழந்தைகளுக்கு பாலூட்டும் படத்தையும் பதிவிட்டிருந்தார். அந்தப் படத்திற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், வாழ்த்துகள் வைரமுத்து சார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சின்மயி, “இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன். இதற்கு தமிழர் ஒருவர் இதனை பதிவிட்டுள்ளார். நான் எனது கர்ப்ப கால புகைப்படத்தை வெளியிடாததற்கு உண்மையான காரணம் இருக்கிறது.

எனக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால் தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று கூறுகிறார். நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி” என்று, காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.