தமிழகத்தில், உள்ள மாநகராட்சிகளில் (சென்னை நீங்கலாக ) மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகளில் புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பணியாளர் பிரிவு, வருவாய் மற்றும் கணக்குப் பிரிவு, பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு ஆகிய 4 பிரிவுகளாக இயங்கி வரும் நிலையில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், ஒசூர், தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் போதுமான பணியிடங்கள் இல்லை என புகார் வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சேவையை மேம்படுத்துதல், வருவாயை பெருக்குதல், ஆகிய காரணங்களுக்காக புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய சூழல் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.