ஆந்திர மாநிலம் ஏலூரூ மாவட்டத்தில் துருல லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த பவன் கல்யாண் (24) என்பவரும், ஜங்காரெட்டிகூடத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ் என்பவரின் மகள் சியாமலாவும் (18) ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்.
அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டதை அடுத்து, இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தங்களுடைய காதல் பற்றி குடும்பத்தாரிடம் கூறினர். ஆனால் இரண்டு பேரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை.
காதலனை திருமணம் செய்ய முடியாத காரணத்தால் மனவேதனையில் இருந்த சியாமளா கடந்த ஜூன் மாதம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெண்ணின் தந்தை பவன் கல்யாண் மீது கோபத்தில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி நண்பர்கள் அளித்த விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்ற பவன் கல்யாண் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஜங்காரட்டி கூடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பவன் கல்யாணை நாகேஸ்வர ராவ் அழைத்து சென்றது தெரிய வந்தது. எனவே நாகேஸ்வரராவை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பவன் கல்யாணை கொன்று தனது மகள் புதைக்கப்பட்ட இடத்தின் அருகிலேயே புதைத்து விட்டதாக நாகேஸ்வரராவ் கூறினார்.
அங்கு சென்ற போலீசார் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் பவன் கல்யாண் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in