உத்தரப்பிரதேச மாநிலத்தில் டெங்கு பரவல் அதிகம் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விடுமுறை இன்றி மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் பிளேட்லெட்டுகளின் அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அவர்களுக்கு ரத்தத்தில் ட்ரிப்ஸ் மூலம் பிளேட்லெட்டுகள் ஏற்ற வேண்டிய தேவை ஏற்படும். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மற்றும் சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு காரணமாக அங்கு பிளேட்லெட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை வைத்து பல மோசடி சம்பங்களும் அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் பிராயக்ராஜ் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 32 வயது டெங்கு நோயாளிக்கு பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸ் கலந்து ரத்தத்தில் ஏற்றியுள்ளனர். இதன் காரணமாக நோயாளி உயிரிழந்தார்.
அரசு உத்தரவின் பேரில் அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறை நடத்திய ரெய்டில் போலி பிளேட்லெட் பாக்கெட்டுகளை கடத்தி விற்ற 10 பேர் கொண்ட கும்பல் சிக்கியுள்ளது. ஏழை பாமர மக்களை குறிவைத்து இந்த மோசடி நடந்துள்ளது.
newstm.in