தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கு ரயில்வே நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது. மும்பை சென்ட்ரல் டிவிஷனில் உள்ள ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விலை ரூ.10ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய கட்டணம் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வருகிறது. மும்பை சென்ட்ரல், தாதர், போரிவலி, பாந்த்ரா டெர்மினஸ், வாபி, வல்சாத், உத்னா மற்றும் சூரத் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுக்கு ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் கூட்டம் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் பண்டிகை காலத்துக்காக 32 சிறப்பு சேவைகளை தொடங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. தர்பங்கா, அசம்கர், சஹர்ஷா, பாகல்பூர், முசாபர்பூர், ஃபெரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் போன்ற முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.