உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஓயோ நிறுவனத்தின் ஹோட்டல் அறையில் ஒரு தம்பதி தங்கினர். அவர்கள் தங்கியிருந்த போது ஒரு கும்பல் அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் அந்தரங்கத்தை வீடியோவாக எடுத்துள்ளனர்.
பின்னர், வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று அவர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பான புகாரில் போலீஸார் நான்கு பேரைக் கைது செய்தனர். அவர்கள் ஹோட்டல் அறையை புக் செய்து தங்குவது போல் அறையில் ரகசிய கேமராவை வைத்துள்ளனர்.
சில நாட்கள் கழித்து மீண்டும் அதே அறையை புக் செய்து ரகசியமாக வைக்கப்பட்ட கேமராவை எடுத்து அதில் பதிவான வீடியோக்களை வைத்துச் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அப்படி ஒரு தம்பதியினர் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்து அவர்களைப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக, விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார் மற்றும் அனுராக் குமார் சிங் என்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
காவல்துறை அவர்களிடம் இருந்து 11 லேப்டாப்கள், 7 சிம்கள், 21 மொபைல்கள், பல்வேறு வங்கிகளின் 22 ஏடிஎம் கார்டுகள், ஒரு பான் கார்டு, ஒரு ஆதார் கார்டு மற்றும் ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றியுள்ளனர்.
newstm.in