ஒடிசா மாநிலம் சம்பால்பூர் மாவட்டம் ரவுத்பாரா கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன் பாடிங் என்பவர் மனைவி சாவித்ரியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் மது போதையில் வீட்டுக்கு வந்த ரஞ்சன் மனைவியிடம் ஆமையை கொண்டு கறி வறுத்து தரும்படி கேட்டுள்ளார். மனைவி சாவித்ரி சமைத்து வந்து கணவருக்கு பரிமாறியுள்ளார்.
உணவை சாப்பிட்ட கணவர் ஆமைக் கறி வறுவல் ஏன் கருகிவிட்டது என ஆத்திரமடைந்தார். இது வாக்குவாதமான நிலையில், போதையில் இருந்த ரஞ்சன் மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். மனைவி மயங்கி விழுந்த நிலையில், அப்படியே விட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார்.
போதை தெளிந்து மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி இறந்த விஷயம் தெரியவந்தது. கொலையை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டமிட்ட அவர் மனைவியின் உடலை தூக்கி வீட்டின் பின் புறத்தில் குழி தோண்டி புதைத்தார்.
தனது மனைவி கோபித்துக்கொண்டு சென்றுவிட்டதாக உறவினர்களிடம் கூறினார். மருமகனின் மீது சந்தேகம் கொண்ட சாவித்திரியின் தாயார் காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையை பார்த்து ரஞ்சன் தப்பியோட நினைத்தார்.
அவரை மடக்கி பிடித்து காவலர்கள் விசாரித்த போது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வீட்டு பின்புறத்தில் இருந்து உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கா அனுப்பிவைத்தனர். மனைவியை கொன்ற ரஞ்சனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in