ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
தீபாவளி கொண்டாட்டங்கள் இருக்கும் அதே வேளையில் விபத்துகளும் ஏற்படுவது வழக்கம். அதனால் முடிந்தவரை மக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி கொண்டாட வேண்டும்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் பட்டாசு விபத்து நிகழ்ந்துள்ளது. வடமாலைப்பேட்டையில் தற்காலிகமாக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு 11 மணியளவில், பட்டாசு கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென அருகே இருந்த ஐந்து கடைகளுக்கும் பரவியதால், பட்டாசுகள் வெடித்து சிதறின. இதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து புத்தூர், காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விரைந்த தீயணைப்புத் துறை வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த இருவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
20 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
newstm.in