ரெட் புல் நிறுவனத்தின் உரிமையாளர் டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் காலமானார்!

1985-ம் ஆண்டு டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸிம் அவரது நண்பரும் இணைந்து ரெட் புல் நிறுவனத்தை தொடங்கினர். அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைப்பார்த்த டீட்ரிச் தொழில் நிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது வழங்கப்பட்ட இனிப்பு எனர்ஜி பானம் ரெட் புல் நிறுவனத்தை தொடங்க மையப்புள்ளியாக இருந்தது.

மேலும் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது ஏற்படும் ஜெட்லாக்கை தவிர்க்கவும் இந்த ரெட் புல் பானம் உதவியது. உலகின் மிகவும் பிரபலமான எனர்ஜி பானமான ரெட் புல் உலகமெங்கும் உள்ள பல நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. 2019-ல் உலகின் மிகவும் பிரபலமான எனர்ஜி பானமாக ரெட் புல் தேர்வு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் மிக பெரிய பணக்காரரான டீட்ரிச்யின் சொத்து மதிப்பு 27.4 பில்லியன் டாலர் அளவில் இருக்குமென 2022-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ரெட் புல் மட்டும் இல்லாமல் பார்மூலா அணியின் உரிமையாளும் இவரே ஆவர். இவர் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை புரிவதற்கு உதவியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா நிறுவனமான ரெட் புல் நிறுவனத்தின் உரிமையாளரும், நிறுவனருமான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ், உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலக நாடு அனைத்தும் வருத்தம் தெரிவித்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.