தீபாவளியை பண்டிகையொட்டி புதுச்சேரியில் மேலும் 50 புதிய வகை மதுபான வகைகள் அறிமுகமாகியுள்ளது. பிராந்தி–8,விஸ்கி–10, வெளிநாட்டு பானங்கள்–20, ஒயினில் 10 என 50 புதிய வகை மதுபானங்கள் அறிமுகமாகியுள்ளன. அத்துடன் மது பிரியர்களை கவர செலபரேஷன் பேக் என்ற பெயரில் பல சலுகைகளை கொடுத்து குஷிப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து உரிமையாளர்கள் கூறும்போது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து வர உள்ள இந்த புதிய மதுபான வகைகளை அறிமுகமாகியுள்ளன. வழக்கமான மதுபான வகைகள் குடிக்கும் சற்று தலைவலி, குமட்டல், மயக்கம் இருக்கும்.ஆனால்.இப்போது அறிமுகமாகியுள்ள பிராண்டுகளை குடித்தால் காலையில் வழக்கம்போல்,எந்த பிரச்னையும் இல்லாமல் வேலைக்கு சென்றுவிடலாம் என்பதால் இவற்றில் நல்ல,வரவேற்பு கிடைத்துள்ளது என்றனர்.
ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான வகையில் இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய பிராண்டு மதுவகைகளை மது பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் புதுவகை மதுபானகளுக்கு பல ஆப்பர்கள் கொடுப்பதால், மதுபிரியர்கள் குஷியாக உள்ளனர்.