விருதுநகர் இளைஞர்களே..!! வரும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவய்ப்பு முகாம்!

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 2ஆம் மற்றும் 4ஆம் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக 28.10.2022 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ/ டிப்ளமோ ஆகிய கல்வி தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, துத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தெரிவு செய்ய உள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 28.10.2022 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.