8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. ரயில்வே துறையில் வேலை..!!

ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பயிற்சியாளர் பணியிடங்களை அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி்.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் (Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வெல்டர் (கேஸ் மற்றும் எலெக்ட்ரிக்), ஷீட் மெட்டல் வெர்கர், லைன்மேன், வயர்மேனெ, கார்பென்டர், பெயிண்டர் (பொது) தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது.

தெரிவு முறை: 10-ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.

வயதுக்கான தகுதி: விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அறிவிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு இருக்கு மேல் பட்டியல் இன ஜாதிகள், பட்டியல் இன பழங்குடியின வகுப்பினர் 5 வருடங்கள் வரையில் வயதுவரம்பு சலுகை பெற தகுதியுடையவர்கள்.

www.rrcer.com – kolkata என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ், நகல் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் லாஸ் போட்டோ, கையொப்பம், 8,10ம் வகுப்பு கல்வி சான்றுகள் ஆகியவற்றை பதவேற்றம் செய்ய வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.