
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரங்கனைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாலினபாகுபாட்டை களையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ரூபாய், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சம் ரூபாய், டி20 போட்டிக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பு, வீராங்கனைகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.