நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஒருவர் இழிவாக பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு கனிமொழி எம்.பி வருத்தம் தெரிவித்துள்ளார்.
திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் பொதுமேடையில் குஷ்பு, காயத்ரி ரகுராமன், நமிதா, கவுதமி ஆகியோர் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனது தலைவர் ஸ்டாலினுக்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என கனிமொழி பதிவிட்டுள்ளார்.
newstm.in