தமிழக முதல்வர் ஸ்டாலின் லேசான காய்ச்சல் காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் துர்கா ஸ்டாலின் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்றே மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்வார் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சாதாரண பிரிவில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்வர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புக்காக மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய முதுகுவலியை பரிசோதனை செய்ய வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.