
வட இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வந்ததால் தொடர்ந்து இரண்டு நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று நேற்றைப்போல மழை இருக்காது, ஆனால் ஓரளவுக்கு மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேஸ்புக் பதிவில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் இன்று அவர் ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், “ஹாட்ரிக் லீவ் கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீங்க… நாளைய தினம் விடுமுறைக்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு, எனவே ஹோம்வொர்க்கெல்லாம் முடித்து ரெடியாக இருங்கள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.