
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.3), மற்றும் நாளை என தொடர்ந்து நான்கு நாட்கள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாணவர்களின் நலன் கருதி இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.