
தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் தண்ணீர் லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நிஜலிங்கம், பல்லாவரம் வட்டாட்சியர் அனுமதியின்றி தண்ணீர் எடுத்ததாக 2 தண்ணீர் லாரிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக அனுமதி பெற்ற பிறகு அதிகாரிகளை அணுக முடியவில்லை. எனவே அந்த வாகன சிறைபிடிப்பை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

எனவே அதிகாரிகளை கண்டித்து வரும் திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வரும் திங்கள் முதல் தமிழ்நாடு முழுவதும் 25,000 தண்ணீர் லாரிகள் ஓடாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே தமிழக அரசு முறையான அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
newstm.in