
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், தேவையான மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (04/11/2022) மற்றும் நாளை (05/11/2022) இரண்டு தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழை காரணமாக இன்று மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.