இன்ஷுரன்ஸ் பணத்திற்காக இப்படி கூட செய்வாங்களா..!! கட்டின மனைவியை அதுவும் 7 மாத கர்ப்பணி..!!

துருக்கியின் முக்லா பகுதியில் உள்ள பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்குக்கு ஹகன் அய்சல் (41) என்பவர் தனது மனைவி செம்ரா அய்சலுடன் (32) கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் சென்றிருக்கிறார். அப்போது செம்ரா அய்சல் 7 மாதம் கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். சுற்றுலாவுக்கு சென்றிருந்த போது ஹகன், செம்ராவை 1,000 அடி உயரத்தில் இருக்கும் பகுதிக்கு செல்ஃபி எடுப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார்.

அந்த சமயத்தில் திட்டம் போட்டு எவரும் அருகே இல்லாத நேரமாக பார்த்து நிறைமாத கர்ப்பிணியான மனைவி செம்ராவை 1,000 அடி உயர மலையில் இருந்து கீழே தள்ளி ஹகன் கொன்றிருக்கிறார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஹகன் அய்சலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். வழக்கு விசாரணையின் போது செம்ராவிற்கு உயரத்தை கண்டால் பயப்படுவார் என நன்றாக தெரிந்திருந்தும் ஹகன் அய்சல் மனைவியை மலையில் இருந்து தள்ளி கொன்றிருக்கிறார் என ஊர்ஜிதமானது.

இதுபோக ஏன் இந்த கொலையை செய்தார் என்பது குறித்து அறிந்து நீதிபதிகளே அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஏனெனில் மனைவி செம்ரா பெயரில் உள்ள இன்ஷுரன்ஸ் பணமான 25 ஆயிரம் டாலர் அதாவது 20 லட்சத்து 72 ஆயிரம் ரூபாயை பெறுவதற்காக ஹகன் இப்படியான கொடூர செயலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் முதலில் தனது மனைவியை தான் கொல்லவில்லை என்று தொடர்ந்து சாதித்து வந்துள்ளார். இருப்பினும் குற்றம் நிரூபனமானதால் சிறையில் அடைக்கப்பட்ட ஹகனிற்கு தற்போது வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு ஹகன் அய்சல் விடுதலை ஆவதற்கு 30 ஆண்டுகளாக தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.